Translate

Friday, 10 August 2012

முன்னாள் புலிப் போராளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் - இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் மேஜர் ஜெனரல் குமார் மெத்தா


முன்னாள் புலிப்  போராளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் - குமார் மெத்தா
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் மேஜர் ஜெனரல் அசோக் குமார் மெத்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
 
படையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தெரிவு செய்யப்பட்ட சில முன்னாள் போராளிகளை படையில் இணைத்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மரபுரீதியற்ற யுத்த அணுகுமுறைகளில் முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இதனால் இவர்களை படையில் இணைத்துக் கொள்வது நன்மைகளை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நல்லிணக்க முனைப்புக்களில் இலங்கை அரசாங்கம் கூடுதல் அக்கறை காட்டவில்லை என்றே தாம் முன்னர் கருதியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், 2012 சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன்பின்னர் 90 வீதமான தமது சந்தேகங்களுக்கு தீர்வு கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை நல்லிணக்க முனைப்புக்களை சரியான முறையில் மேற்கொண்டுவருவதாக தென்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனினும், தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளில் அதிகளவு இராணுவத்தினரின் ஆதிக்கம் விரும்பத்தக்கதல்ல என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
கால எல்லையை நிர்ணயித்து சிவிலியன் நிர்வாக அலகுகளிடம் படையினரின்பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment