Translate

Friday, 10 August 2012

தில்ருக்ஷனின் மரணத்திற்கு அஞ்சலியாக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

தாக்குதல்களுக்கு உள்ளாகி கோமா நிலையில் இருந்து உயிரிழந்த அரசியல் கைதியான மரியதாஸ் தில்ருக்ஷனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரதத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.


நிமலரூபன் மற்றும் தில்ருக்ஷன் ஆகிய அரசியல்கள் கைதிகளின் மரணமானது சிறைக்கைதிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த நிலையில் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை சுதந்திரமாக சென்று பார்ப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமெனவும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுகின்றனர்.

வவுனியா சிறைச்சாலையில் பொலிஸாரினாலும் இராணுவத்தினராலும் தாக்குதலுக்கு உள்ளான முப்பது தமிழ் அரசியல் கைதிகள் மஹர சிறைச்சாலையில் உரிய சிகிச்சைகளின்றி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சையினை வழங்கவேண்டும். அத்தோடு கைதிகளின் பாதுகாப்பினையும் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் ௭ன்றும் தமிழ் அரசியல் கைதிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

http://virakesari.lk...ocal.php?vid=85 

No comments:

Post a Comment