டெசோ மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது
இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா.வை கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.நா. சபையால் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும்.
உலகெங்கும் உள்ள தமிழர்களைக் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களைத் திரட்டி எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
சிங்கள தேசியவாதம் என்று கூறி தமிழர் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் கொள்ளையடித்து வருகின்றனர். தமிழர் மறுவாழ்வுக்காக இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கைப் பிரச்னையில் மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு தவறானதாகும். அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்காகவே நான் இப்போது டெசோ மாநாட்டுக்கு வந்துள்ளேன் என விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment