Translate

Tuesday, 14 August 2012

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவாளர்களே வேட்பாளர்களைத் தாக்குகின்றார்கள்:அரியநேத்திரன்



மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானின் ஆதரவாளர்களும் அவரது கட்சியைச் சேர்ந்தோருமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
 
இவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு படையினரும், பொலிஸாரும் ஆதரவாக உள்ளனர். இவ்வாறு குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.
 
அத்துடன், நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வன்முறையற்ற சுதந்திரமான ஒரு தேர்தலாக நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையாளரும் பொலிஸாரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இல்லத்தில் நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

No comments:

Post a Comment