
வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்களில் பலர் இராணுவ வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிய வருகிறது. முப்பது வயதிற்கு குறைவான மன நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களே இவ்வாறு சிக்கிச்சை பெற்று வருகின்றனர். வெளியில் உலாவ முடியாத அளவிற்கு தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜபக்ச அரசால் மறைக்கப்படுகின்றது. இவர்கள் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதால் ஏனையோருக்கு இதுகுறித்த தகவல்கள் தெரியவரவில்லை என்று கருத்துத் தெரிவித்த ஒருவர் குறிப்பிட்டார்.
வன்முறைகளிலும், கொலைகளிலும், பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய்களே இவ்வாறான மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இவர்களது தொகை குறைந்தது ஐந்தாயிரமாவது இருக்கலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
http://inioru.com/?p=29704
No comments:
Post a Comment