Translate

Tuesday 14 August 2012

தமிழ்க் கூட்டமைப்பின் பின்னால் சர்வதேசம் இது அரசுக்கும் தெரியும் என்கிறார் சம்பந்தன்

தமிழ்க் கூட்டமைப்பின் பின்னால் சர்வதேசம்
இது அரசுக்கும் தெரியும் என்கிறார் சம்பந்தன்
news
 "சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றது என்பது இலங்கை அரசிற்கு நன்றாகத் தெரியும். இந்த நிலையில்தான் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள் என்பதைக்காட்டி சர்வதேச சமூகத்தை திசை திருப்பும் நோக்குடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒரு வருடத்திற்கு முன்பதாக இலங்கை அரசு நடத்துகின்றது.''

 
 இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படும் முதலமைச்சர் கிழக்கு மாகாண சபைக்குத் தேவையில்லை. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய முதலமைச்சரே கிழக்கு மாகாண சபைக்குத் தேவையாகும். 
 
அதன் காரணமாகத் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது என்றும் சம்பந்தன் இடித்துரைத்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை பிரதேசத்தில் உள்ள பொதுநல மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் உரையாற்றும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
திருமலை நியூ சில்வர் ஸ்டார் ஹோட்டலில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கொள்கை விளக்கக் கலந்துரையாடல் மற்றும் வேட்பாளர் அறிமுகமும் நடத்தப்பட்டது. திரு கோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் தலைமை வகித்தார்.
 
சம்பந்தன் தனது உரையில் மேலும் கூறியவை வருமாறு:
ஒருமித்த நாட்டுக்குள் நிலையானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு  நடத்தி காணும்படி அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் இந்தியா ஆகியன இலங்கை அரசுக்கு தெளிவாக வற்புறுத்தியுள்ளன.
 
சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றது என்பது இலங்கை அரசிற்கு நன்றாகத் தெரியும். இந்த நிலையில் தான் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள் என்பதைக் காட்டி சர்வதேச சமூகத்தை திசை திருப்பும் நோக்குடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒரு வருடத்திற்கு முன்பதாக இலங்கை அரசு நடத்துகின்றது.
 
 அரசின் இந்தத்தந்தி ரோபாயத்தை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிப்பெரும் கட்சியாக எதிர்வரும் தேர்தலில் தெரிவு செய்வதன் மூலம் முறியடிக்க வேண்டும் என்றார்.
 
திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண் டாயுதபாணி மற்றும் வேட் பாளர்களான டாக்டர் திரு மதி இந்துராணி தர்மராஜா, க.கோணேஸ்வரன், ச.அந்தோனிப்பிள்ளை, ந.கும ணன், ஜெ.ஜெனார்த்தனன், கு.இரத்தினகுமார், ச.விஜேகாந்த் ஆகியோரும் அங்கு உரையாற்றினர்.      

No comments:

Post a Comment