டெல்லி: இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக சென்னையில் திமுக நடத்திய டெசோ மாநாடு காலம் கடந்து எடுத்த முடிவு என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக குரல் கொடுத்தது. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோதும் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்பந்திக்கவில்லை. இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல்ரீதியாகத் தீர்வு காண அந் நாட்டுக்கு ராஜீய ரீதியாக மத்திய அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை.
ஆனால் இப்போது ஐ.நா. சபையின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று திமுக இப்போது டெசோ மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றுவது காலம் கடந்து எடுத்த நடவடிக்கையாகும் என்றார் நாயுடு.
No comments:
Post a Comment