Translate

Tuesday, 18 September 2012

லண்டனில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!


லண்டனில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!
TNRF-Eastham-Thileepan-Nikalvu170912-01.jpg
தியகதீபம் லெப்ரினன் கேனல் திலீபன் அவர்களின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.

1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதி லெப்ரினன் கேனல் திலீபன் அவர்கள் ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து 12 நாட்களாக அவர் நடாத்திய தியாகப் பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று (17.09.2012) அவருக்கான வணக்க நிகழ்வுகள் லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் உள்ள ட்றினிட்றி சென்ரரில் நடைபெற்றது. 


தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வணக்க நிகழ்வு மாலை 7:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை திரு.சிவா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

ஈகச்சுடரினை திரு.ஆறுமுகம், திரு.நாதன் ஆகியோர் ஏறிவைத்தனர். தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையை திரு.செல்லப்பா அவர்கள் அணிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் மலர்வணக்க்அம் செலுத்தினர்.

நிகழ்வில் தலைமை உரையினை திரு.மரியதாஸ் அவர்களும், திலீபன் நினைவு சுமந்த நினைவுரையினை திரு.மாறன் அவர்களும், நன்றி உரியினை திரு.முருகானந்தம் அவர்களும் வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் நேற்றைய தினம் அதிகாலை மகிந்தராஜபக்சவின் இந்திய வருகையை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குழித்த தாய்த் தமிழக உறவான விஜயராஜ் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொண்டதோடு வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இருக்கும் அவரின் உடல் சுகமடைய பிராத்தனையும் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment