இலங்கையில் கொல்லப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள், தொடர்பாக அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் போர்க் குற்றவிசாரணை நடத்தப்படவேண்டுமென, வலியுறுத்தி சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் தல்வீர் பண்டாரியிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. சர்வதேச போர்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றில், நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் இந்தியரான தல்வீரை டெல்லியில் சந்தித்த ஆ.தி.மு.க வழக்கறிஞர்கள் மேற்படி மனுவைக் கையளித்துள்ளனர். இந்த உத்தரவை கழகத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா பிறப்பித்ததாகவும் மேலும் அறியப்படுகிறது.
இலங்கை அதிபர் 19ம் திகதி இந்தியா செல்லவுள்ள நிலையில், அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற மனுவை, ஆதிமுகவினர் கையளித்திருப்பது தொடர்பாக டெல்லி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசையும் இது இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது எனவும் கூறப்படுகிறது. கடந்தவாரம் சிங்கள பத்திரிகை ஒன்று செல்வி ஜெயலலிதாவை மிகவும் கேவலமான முறையில் காட்டூன் ஓவியம் வரைத்து அதனை வெளியிட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம். இச் செயலுக்கு தகுந்த பதிலடியை தற்போது செல்வி ஜெயலலிதா அவர்கள் கொடுத்துள்ளார் என்று விடையம் அறிந்த வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment