Translate

Tuesday 18 September 2012

தமிழர்களிடமிருந்து கிழக்கு மாகாணம்பறிபோகும் காலம்வெகுதொலைவிலில்லை


அனலை நிதிஸ் ச. குமாரன்
செப்டம்பர் 8-ஆம் தேதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்பல்வேறு விதமான ஊகங்களை வெளியுலகத்துக்கு ஏற்படுத்தியுள்ளதுஇத்தேர்தலானது கிழக்கு மாகாணம் என்பது மூவின மக்களையும் தன்னகத்தேகொண்டுள்ளது என்பதனையும்இவை கூடிவாழும் இனங்கள் எனபதனையும்உலகத்துக்கு எடுத்துக் காட்டவே நடத்தப்பட்டுள்ளது.

2008-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் முடிவுகளின்படிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 20, ஐக்கிய தேசியக் கட்சி - 13, மக்கள் விடுதலை முன்னனி - 1, தமிழ் ஜனநாயக தேசியமுன்னணி -1 என்ற எண்ணிக்கையில் ஆசனங்களைப் பெற்றிருந்தன.
35 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படிஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி 12 ஆசனங்களை மாவட்டங்கள் ரீதியாகப் பெற்றுள்ளது.மாகாண மட்டத்தில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற ரீதியில் 2 போனஸ்ஆசனங்கள் அடங்கலாக மொத்தம் 14 ஆசனங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளதுசிறிலங்காமுஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுஐக்கிய தேசியக் கட்சி 4ஆசனங்களைப் பெற்றுள்ளதுதிருகோணமலை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட,மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் பங்காளிக் கட்சியான விமல் வீரவம்சதலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
2008-ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபோட்டியிடவில்லை என்கிற காரணத்தினால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிஅதிகப்படியான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்ததுதற்போது நடந்ததேர்தலென்பது தமிழர்களுக்கிடையில்பிரிந்து நிற்கும் சிலரினால் தமிழ்த் தேசியமுன்னணி அதிகப்படியான ஆசனங்களைப் பெற முடியாமல் போனாலும் 11ஆசனங்களைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பலமிழக்கச்செய்துள்ளது.
ஒட்டுக் குழுக்களின் செல்வாக்கு இல்லையென்றால் ஆளும் கட்சி படுதோல்வியையேசந்திக்க வேண்டிவந்து இருக்கும்இதற்காகவே தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிக்கும்நோக்கில் சிங்கள அரசுகள் தமிழர்களைப் பிரித்தாளும் தந்திரங்களை மேற்கொண்டுவருகிறது.
பிள்ளையானின் பரந்த நோக்கம்
2008-ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தல் மூலமாக கிழக்கு மாகாணத்தின்முதலமைச்சராகப் பதவியேற்ற பிள்ளையான் தமிழர் தாயகத்துக்குள்ளேயேபிரிவினைவாதத்தை உருவாக்கினார்பிற இனத்தவரை வெற்றி கொள்ளவைத்தபெருமை பிள்ளையான் மற்றும் கருணா போன்ற துரோகிகளையே சாரும்தமிழ் மக்கள்அதிகப்படியாக இருந்த மாவட்டங்கள் இன்று பிற இனத்தவர்கள் அதிகப்படியாகஇருக்குமளவு நிலையை உண்டுபண்ணியது சிங்களம்.
தமிழ் மற்றும் கிழக்கு மக்கள் என்று கூறிவந்து தமிழர்களுக்கு இடையேபிரிவினவாதத்தை உண்டுபண்ணிய பிள்ளையான் தனது ஆட்சிக் காலத்தில் அந்தமக்களுக்கோ அல்லது கிழக்கு மாகாணத்துக்கோ எதனைச் செய்து சாதித்தார் என்கிறகேள்வி பலமாக எழுகிறது.
எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு சிங்களத்துக்கு விலைபோன பிள்ளையான் கூறும்கூற்றுக்கள் நகைப்புக்கிடமாக இருக்கிறதுகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரேமுதலமைச்சராக வரவேண்டுமே தவிரஅவர் முஸ்லிமா அல்லது தமிழரா என்றபிரச்சினை இல்லை என்று பிபிசி தமிழோசையிடம் பிள்ளையான் கூறியுள்ளார்.
கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியாமல் போனால் அதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டுமென்றும் அவர் கூறுகின்றார்இதன்மூலமாக பிள்ளையான் ஒரு விலைபோகும் கோழை என்பதுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிள்ளையானின் விசுவாசத்தை மகிந்தா மறப்பதற்கு இல்லை காரணம் பிள்ளையானின்அடாவடித்தனம் மூலமாகவே கிழக்கு மாகாணத்தில் தான் செய்ய எண்ணும்வேலைகளைக் கச்சிதமாகச் செய்ய முடியும் என்பதனை நன்கே அறிந்து வைத்துள்ளார்மகிந்தாஇதற்காகவேதேர்தலில் அறுதிப்பெரும்பான்மைபெறாவிட்டாலும்பிள்ளையானைச் சந்திக்கும் உரிமையை மகிந்தா வழங்கியுள்ளார்.
11 இடத்தில் நின்ற பிள்ளையான் ஆட்களில் பிள்ளையான் மட்டுமே வென்றுள்ளதுபிள்ளையானின் நான்கு ஆண்டு ஆட்சி எந்தநிலையில் இருந்தது என்பதனை தமதுவாக்குகள் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்கருணாவின் சகோதரிபடுதோல்வி அடைந்துள்ளது பிள்ளையான் மற்றும் கருணா போன்ற எட்டப்பர்களைத்தமிழர்கள் புறக்கணித்துள்ளார்கள் என்பதனையே எடுத்துக்காட்டுகிறது.
கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவுகள்
அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காகப் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 16, சுயேச்சைக் குழுக்கள் அடங்கலாக 34 அணிகளின்சார்பில் 578 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிஐந்தும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கும்ஐக்கிய தேசியக் கட்சி மூன்றும்மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சி இரண்டு இடங்களும் பெற்றுள்ளனஇதன்மூலமாக அம்பாறை மாவட்டம் தமிழர்களுடைய இருப்பிடம் என்பதும் முஸ்லிம்மற்றும் அதிகப்படியான சிங்கள மக்களின் இருப்பினால் தமிழர் தமது நிலத்தைமற்றவர்களுக்குத் தாரை வார்துக்கொடுத்துள்ளார்கள் என்பதனையே எடுத்துக்காட்டுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆறும்ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி நான்கும் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றுமாகவெற்றிபெற்றுள்ளன இதன் மூலமாக பிள்ளையான் கூறிவந்த பிரிவினைவாதக்கூற்றான “மட்டக்களப்பு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டணியினரைப் புறக்கணிப்பார்கள்"என்பது பொய்யாகியுள்ளது.
தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் உண்மையாகவே தமிழர்களின் எதிர்காலத்தைச்சிந்தித்துச் செயலாற்றும் தலைமையையே ஆதரிப்பார்கள் என்பதனையே மட்டக்களப்புமக்கள் உணர்த்தியுள்ளார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றுஇடங்களையும்தமிழ்த் தேசியக் கூட்டணி மூன்று இடங்களையும்சிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ் 2 இடங்களையும்ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தேசிய சுதந்திர முன்னணிதலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.இதன் மூலமாகதமிழீழத்தின் தலைநகரான திருகோணமலை தமிழரின் இருப்பை விட அதிகமாகவேசிங்களத்தின் ஆதிக்கம் இருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது.
எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மையற்ற நிலையில் முடிவுற்ற தேர்தலைத்தொடர்ந்து கிழக்கு மாகாணசபை தொடர்பாக இஸ்திரத்தன்மையான நிலைப்பாடேதொடர்ந்தும் இருக்கப் போகிறதுமுஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடனேயே கிழக்குமாகாண சபை நிர்வாகம் அமையப்போகிறதுஅரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்காங்கிரஸ் பல்வேறுபட்ட அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்யப்போகிறது என்பதும்,உலக சமூகத்துக்கு கிழக்கு மக்கள் அரசின் பக்கமே என்கிற பிரச்சாரத்தைவலுப்படுத்தவுமே இத்தேர்தல் உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:nithiskumaaran@yahoo.com

No comments:

Post a Comment