கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பிரித்தானியாவில் இருந்துசென்ற ஊடகவியலாளர் ஒருவர் டெசோ மாநாட்டில் கலந்துகொண்டு கடுமையான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தார். இதனை அவதானித்த கலைஞர் கருணாநிதி, தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். அவ் ஊடகவியலாளர் அவர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் பேச சுமார் 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.
இன்று மதியம் நடந்த சந்திப்பில், அவ்ஊடகவியலாளர் அவர்கள் கலைஞரைச் சந்தித்து முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைகள்(மக்கள் அறிந்திராத) பலவற்றை எடுத்துரைத்தார். அதற்கான ஆதாரப் படங்களையும் காட்டி, பிரித்தானிய தமிழர் பேரவையால்(BTF) முன்னெடுக்கப்படும் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்ற, கோட்பாட்டை விளக்கினார். இதனை அடுத்து மேலதிகமாக நேரத்தை ஒதுக்கிய கலைஞர் கருணாநிதி, இது தொடர்பாக தாம் ஆவன செய்வதாக கூறினார்.
இந்திய நாடாளுமன்றத்தில் தி.மு.காவின் எம்.பிக்கள் 20 பேர் இருப்பது அனைவரும் அறிந்த விடையம். மற்றும் தி.மு.கா கூட்டணிகளாக விளங்கும் பிறமாநில எம்.பீக்களையும் ஒன்றுசேர்த்து, இந்திய நாடுளுமன்றில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற தீர்மானத்தை கொண்டுவர தான் கலைஞரை வலியுறுத்தியதாகவும், இதற்கு ஆவன செய்வேன் எனக் கலைஞர் கூறியதாகவும், அண்ணா அறிவாலயத்துக்கு வெளியே வைத்து ஊடகவியலாளர் அவர்கள் நிருபர்களுக்குத் தெரிவித்தார்.
பிற மாநில எம்.பீக்கள் பலரையும் தொடர்புகொண்டுள்ள ஊடகவியலாளர் அவர்கள், சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்பதனை அவர்களுக்கு எடுத்துரைத்து வருவதோடு மட்டுமல்லாது சில ஆதாரப் புகைப்படங்களையும் காட்டி முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிதேவை என நெஞ்சை உருக்கும் வண்ணம் வேண்டுகோள்களையும் விடுத்துவருகிறார்.
இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கடற்கரை மணலில், பதுங்கு குழிகளில் இருந்த மக்களை, இலங்கை இராணுவம் கைக்குண்டு போட்டுக் கொல்லும் காட்சிகள் அடங்கிய ஆதாரப் புகைப்படங்களை அவர் காட்டியே, எம்.பீக்களோடு உரையாடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே இக்கட்டான ஒரு சூழ் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந் நடவடிக்கைகள் எவ்வாறான வினைகளைத் தோற்றுவிக்க இருக்கிறது என்று பொறுத்துத் தான் பார்க்கவேண்டி உள்ளது
No comments:
Post a Comment