Translate

Wednesday 5 September 2012

கிழக்கு வாழ் அன்பான உறவுகளுக்கு பணிவான அவசர வேண்டுகோள்...


தமிழீழ தமிழர்களாகிய எமது உரிமைப்போராட்டம் கடந்த அறுபது ஆண்டு காலமாக மூன்று சதார்ப்தங்கள் மூலமாக விரிவுபட்டு சொல்ல முடியாதா பல உயிரிழப்புக்களுக்கு மத்தியிலும் இன்றும் எமது போராட்டம் இன்னல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்றால் அதில் எந்தவொரு ஐயமுமில்லை.

இப்படி இருக்கையில் நாலாம் கட்டப்போராக ஐ.நா தீர்மானம் என்றொரு பிரேரணை அமெரிக்காவினால் ஸ்ரீலங்காவிற்கு எதிராக பல அம்சக்கொரிக்கைகளை முன்வைத்து கடந்த மாசி மாதம் கொண்டுவரப்பட்டு அந்த பிரேரணையில் மாபெரும் வெற்றியை தமிழர்களிடையில் நிலைநிறுத்தியது.

இந்த தீர்மானம் தமிழர்களாகிய எமது போராட்டத்தில் முதல் அடிக்கல் என்றே கருதப்பட்டது.

தீர்மானத்தையடுத்தும் எதிரியானவன் எம் மண்ணை திட்டமிட்டு ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தாயகத்தில் கிழக்கு,வடமத்திய,சப்ரகமுவ மாகாண தேர்தல் ஒரு வருடத்திற்கு முன்னே கலைத்து தமிழ் மக்களிடையில் திணிக்கப்பட்டு இம்மாதம்( செப்டம்பர்) எட்டாம் திகதி நடைபெறவிருக்கின்றது.இந்த தேர்தலில் பல கட்சிகளும் பலர் தனிப்பட்ட ரீதியாகவும் போட்டியிடுகின்றனர்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் எதற்க்காக நடத்தப்படுகின்றது என்பதை கிழக்குவாழ் தாயக உறவுகள் கவனத்திற்கொள்ள வேண்டும்.இத் தேர்தல் எமது சுகந்திரத்திர்காகவும்,எம் தாயக பூமியை மீட்டெடுப்பதற்காகவும் நடத்தப்படும் ஓர் அரசியல் யுத்தகளம்.

இத் தேர்தலில் தமிழர்களுக்கு ஆதரவாகவும்,சிங்கள அரசிற்கு எதிராகவும் தந்தை செல்வா ஐயா காலத்தில் தொடங்கப்பட்ட தமிழரசுக் கட்சி  அதாவது இப்பொழுது இரா.சம்பந்தன் ஐயாவினால் நகர்த்திசெல்லப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் மாபெரும் அரசியற்கட்சி கிழக்கு மாகாணத்தில் எமது உரிமைக்காக களமிறங்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக கடந்த பலவருடங்களாக சந்திரகாந்தன் சிவநேசன் என்னும் பிள்ளையான் இருந்துவந்தது யாவரும் அறிந்த ஒன்று இவர் பிறப்பு வழி ஒரு தமிழனாக இருந்தாலும் சிங்கள அரசுடன் இணைந்து பணத்திற்காகவும்,பதவிக்காகவும் தமிழர்களின் அபிலாசைகளையும்,தமிழர்களை அழிக்கும் நோக்குடனும் அரசியலை முன்னகர்த்தி சென்றுள்ளார் என்றால் அதில் எந்தவொரு ஒளிவு,மறைவும் இல்லை.இப்படியான ஒருவர் மறுபடியும் கிழக்கு மாகாணத்திற்கு முதலமச்சராகவேண்டுமா இல்லையா என நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

இதில் என்னவொரு வேடிக்கை என்றால் ஒருமுறையும் இல்லாதவாறு இம்முறை கருணாவின் சகோதரியையும் அரசியலில் களமிறக்கி கிழக்கு மாகாண சபைதேர்தலில் போட்டியிட பிரச்சாரம் செய்கின்றார்கள் கருணாவும்,சிங்கள அரசாங்கமும்.

அன்பான கிழக்குவாழ் உறவுகளே இப்படியான ஒரு நிலைப்பாட்டில் அரசாங்கம் தங்களை சர்வதேசத்தின் முன் நல்லவர்களாகவும்,எமக்கு இளைத்த போர்குற்றங்களை மறைத்து கிழக்குவாழ் உறவுகளாகிய நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து தனித் தமிழீழம் என்ற நினைவுகள் கூட இல்லையென்று  சர்வதேச நாடுகளுக்கு வெளிப்படுத்தும் வண்ணம் இத் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக கங்கணம்கட்டி ஆட்டம் போடுகிறது சிங்கள அரசாங்கம்.

என் இனிய உடன்பிறப்புக்களே ஒருகணம் சிந்தித்து எமது மாவீரர்களையும் அப்பாவி பொதுமக்களையும்,தேசியத் தலைவரையும் மனதில் நிறுத்தி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைதேர்தலில் எமது உரிமைக்காக களமிறங்கி வீட்டு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை பதிவிட்டு எமது பலத்தை சிங்கள அரசிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் மறுபடியும்   நிலைநாட்டுவோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

விஜி தமிழன்

No comments:

Post a Comment