Translate

Wednesday, 5 September 2012

மட்டக்களப்பு மண்டூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் குழு தாக்குதல்!


மட்டக்களப்பு மண்டூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் குழு தாக்குதல்!
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவுசெய்து திரும்பிக்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக மண்டூர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 02ம் இலக்கத்தில் போட்டியிடும் வி.ஆர்.மகேந்திரன் அவர்களின் ஆதரவாளர்கள் மீதே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் பிள்ளையான் குழு வேட்பாளரான சிறி என்பவரே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வி.ஆர்.மகேந்திரன்  மண்டூர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
இதே நேரம் மண்டூர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு வெள்ளாவெளியை நோக்கி வந்துகொண்டிருந்த வி.ஆர்.மகேந்திரன் அவர்களின் ஆதரவாளர்களை மீண்டும் வீதியில் இடைமறித்த வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் பிள்ளையான் குழு வேட்பாளரான சிறி என்பவர் நேரடியாக வி.ஆர்.மகேந்திரனின் வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் வாகனம் பலத்த சேதம் அடைந்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலீஸ் உயரதிகாரிகள் அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 02ம் இலக்கத்தில் போட்டியிடும் வி.ஆர்.மகேந்திரன்  பிள்ளையான் குழுவின் தோல்வி முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் விரக்தியடைந்துள்ளனர் இதனால் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் பிள்ளையான் குழு வேட்பாளரான சிறி போன்றவர்கள் நேரடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடாத்தும் அநாகரிகமான செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர் இவர்களின் இந்தத் தாக்குதல்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை இவர்களை நிச்சயமாக இம்முறை தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் இவர்கள் வீசும் கற்கள் ஒவ்வொன்றும் இவர்களுக்கு எதிரான வாக்குகளாக மாறும் என்பதே உண்மையாகும்.

No comments:

Post a Comment