ஏ.எச்.எம்.பௌசி, ஏ.எச்.எம்.அஸ்வர். எம்.ஏ.எல்.எம். அதாவுல்லா, பைசர் முஸ்தபாவுக்கு ஆப்படித்தது அரசாங்கம்:-
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடுமையான இனவாதி என உக்கிரமான முறையில் தேர்தல் மேடைகளில் கருத்துக்களை வெளியிட்ட முக்கிய முஸ்லிம் அமைச்சர்கள் சிலரை ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டாம் என அரசாங்கத்தின் முக்கியஸ்தர் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஏ.எச்.எம்.பௌசி, ஏ.எச்.எம்.அஸ்வர். எம்.ஏ.எல்.எம். அதாவுல்லா, பைசர் முஸ்தபா ஆகிய அமைச்சர்களுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தனர். அமைச்சர் முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாத்தை தூண்டி வாக்கு சேகரிப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது போல் பள்ளிவாசல்கள் எதுவும் உடைக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment