13வது திருத்தத்தை இரத்து செய்தால், பௌத்த மதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும்: சமித்த தேரர் |
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு கூக்குரலிடுவோர் அந்த திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட்ட பின்னர், வழங்க போகும் மாற்று திட்டம் என்ன என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பத்தேமகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடந்து விட்டால், எமது நாடு சர்வதேசத்தின் முன்னிலையில் மிலேச்சத்தனமான, வலதுகுறைந்த நாடாக மாறிவிடும். எவர் எதனை கூறினாலும் சர்வதேச சமூகம் இன்றி எம்மால் வாழ முடியாது. வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வு வழங்கும் நோக்கத்தில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. |
இந்தியா - பண்டைய காலம் தொட்டு இலங்கையுடன் நெருங்கி செயற்பட்டு வரும் நாடாகும். வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் கடுமையான தேவை இந்தியாவுக்கு இருந்தது. இதற்கு ராஜதந்திர ரீதியிலான தீர்வை முன்வைக்கும் தேவை இந்தியாவுக்கு இருந்தது. இந்த திருத்தச் சட்டம் இந்தியாவினால் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட தீர்வு எனக் கூறுகின்றனர். இலங்கை மீது பலவந்தமாக பருப்பு போட்ட கதையை கூறுகின்றனர்.
அன்று இயக்கர், நாகர்கள் வாழ்ந்த இலங்கைக்கு பௌத்தம் மதம் எம்மை கேட்டு வழங்கப்படவில்லை. பௌத்த மதம் எம்மை கேட்டு அனுப்பி வைக்கப்படவில்லை. அப்படியானால் பௌத்த மதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும்.13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் பாரிய பிரதிபலன்களை கொடுத்தது. அன்று ஆயுதங்களை தாங்கி இருந்தவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டனர் எனவும் பத்தேகம சமித்த தேரர் கூறியுள்ளார்.
விதி விலக்காக சமித்த தேரர் போன்ற பவுத்த துறவிகளும் இருக்கிறார்கள். 13 ஆவது சட்ட திருத்தத்தை இந்தியா திணித்தது என்றால் பவுத்த மதத்தை அசோக சக்கரவர்த்தி இலங்கையை ஆண்ட நாக வம்சத்தவர்களை வைதீக மதத்தில் இருந்து பவுத்த மதத்துக்கு மாற்றினார் என்றும் சொல்லலாம். இன்று தங்களைச் சிங்கள பவுத்தர்கள் என்று சொல்லிக் கொள்வோரில் பெரும்பான்மை முன்னைய தமிழ் பவுத்தர்களே! புத்தளம், சிலாபத்தில் வாழ்ந்த பரதவ சமூக கத்தோலிக்கர்கள் சிங்களத்தை படித்து எங்கள் கண்முன்னே சிங்களவர்களாக மாறிவிட்டார்கள். கொழும்புச் செட்டிகளும் சிங்களவர்களை மணம் செய்து சிங்களவர்களாக மாறிவிட்டார்கள். சலாகம, கரவா, துராவ சிங்களவர்கள் அய்ரோப்பியர் காலத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தமிழர்கள் ஆவர். கறுவா பட்டை உரிக்க ஒல்லாந்தர்களால் கொண்டுவரப்பட்ட தமிழர்களே இன்றைய சலாகம சாதியினர் ஆவர். |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 15 November 2012
13வது திருத்தத்தை இரத்து செய்தால், பௌத்த மதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும்: சமித்த தேரர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment