Translate

Thursday, 15 November 2012

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் நாட்டில் பழுது பார்க்க முடியாதளவு பாதக நிலைமை ஏற்படும்: - சம்பந்தன் எச்சரிக்கை

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் நாட்டில் பழுது பார்க்க முடியாதளவு பாதக நிலைமை ஏற்படும்: - சம்பந்தன் எச்சரிக்கை 
News Service
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் நாட்டில் பழுது பார்க்க முடியாதளவு பாதக நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல்வகைமையை ஓரளவிற்கேனும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் சாசனத்தில் காணப்படும் ஒரே விடயமாக 13ம் திருத்தச் சட்டத்தை நோக்குவதாகத் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment