Translate

Saturday 3 November 2012

40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து

40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவரும் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபருமான மர்சுகி தருஸ்மன் வலியுறுத்தியுள்ளார்.


"40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று விளக்கமளிக்கப்படுவதே பொறுப்புக் கூறுதல் என்பதன் அர்த்தம் எனவும் அது தொடர்பில் இன்னமும் சரியாக விளக்கமளிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான ஆராய நியமிக்கப்பட்டுள்ள சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். அதேநேரம், தானும் நிபுணர் குழுவின் இரு உறுப்பினர்களும் இந்த அறிக்கையை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்” எனவும் தருஸ்மன் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment