13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுதல் மீண்டும் இனப்பிரச்சினைக்கு வழிகோலும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டு 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது கூடுதல் அதிகாரப் பகிர்வினை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.எனினும், வெறுமனே 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அது மீண்டும் இன முறுகல் நிலைமைகளை ஏற்படுத்தக் கூடும்.
லயன் அறைகளில் வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவர்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பெருந்தோட்ட மக்களின் மதுபாவனையை கட்டுப்படுத்த வேண்டும்.
பெருந்தோட்ட மக்களின் நலன்கள் குறித்து அக்கறை செலுத்தாவிட்டால் இனபிரச்சினை ஏற்படக் கூடும் என பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment