Translate

Wednesday, 14 November 2012

அரசின் தாக்குதல்களால்தான் மக்களுக்கு அதிக இழப்பு என்பதை மறைத்தது ஐ.நா.

அரசின் தாக்குதல்களால்தான் மக்களுக்கு அதிக இழப்பு என்பதை மறைத்தது ஐ.நா.
news
இலங்கை அரசின் எறிகணைத் தாக்குதல்களால்தான் பொதுமக்களுக்கு அதிகமான இழப்புக்கள் ஏற்பட்டன என்ற விவரம் தெரிந்திருந்தபோதும் ஐ.நா. அதனைப் பகிரங்கப்படுத்தவில்லை என்று அதன் உள்ளக விசாரணை அறிக்கை விமர்சித்துள்ளது.

 
கொழும்பு அரசின் அழுத்தங்களால் அந்த விவரங்களை ஐ.நா. ஒருபோதும் வெளியிடவில்லை என்று அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது. அந்தச் சமயத்தில் பொதுமக்கள் மீது தாம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தவில்லை என்று இலங்கை அரசு கூறிக்கொண்டிருந்தது. 
 
பொதுமக்களின் இழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை வலுவான உத்திகள் மூலம் தெளிவாகக் கணக்கிட்டு வருவதாக ஐ.நா. கூறிக்கொண்டாலும், அந்த விவரங்களை அது வெளியிடத் தவறியுள்ளது என்கிறது அறிக்கை. தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை என்பதால்தான் அவற்றை வெளியிடவில்லை என்று ஐ.நா. வாதாடுகிறது. 
 
ஆனால், ஐ.நா. கட்டமைப்புக்குள் ஒரு விடயத்துக்காக இன்னொரு விடயத்தை விட்டுக் கொடுக்கும் கலாசாரம் அதிகம் காணப்பட்டது என்ற அறிக்கை வாதிடுகிறது. தொடர்ச்சியாக அதிகரித்து வந்த இழப்புக்களை வெளியிடாமல் எப்படி ஐ.நா. மறைத்தது என்றும் அறிக்கை விளக்கியுள்ளது. ஆதாரமாக பொதுமக்கள் இழப்புக்கள் குறித்த அறிக்கைகள் புள்ளிவிவரங்களையும் இணைத்துள்ளது. 
 
போர்ப் பிரதேசங்களுக்குச் சென்று உதவுவதற்கு இலங்கை அரசின் அனுமதி மேலும் கிடைக்கக் கூடும் என்பதால் இந்த மாதிரியான விடயங்களைப் பற்றி வெளியே பேசாமல் இருந்துவிட ஐ.நா. பணியாளர்கள் தீர்மானித்திருந்தார்கள் என்கிறது அறிக்கை. 
 
இலங்கையின் இறுதிப் போர் நடந்து கொண்டிருந்தபோது ஐ.நா. பாதுகாப்புச் சபையோ வேறு முக்கிய ஐ.நா. அமைப்புக்களோ ஒருமுறைகூட உத்தியோகபூர்வமாகக் கூடியிருக்கவில்லை என்பதையும் அறிக்கை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 

No comments:

Post a Comment