விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த இது தொடர்பான திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தளபதியும், தற்போது இராணுவத் தலைமையகத்தில் பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுபவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், இஸ்ரேலுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, பிறேசிலுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
No comments:
Post a Comment