Translate

Monday, 16 May 2011

ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 04

ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 04

இறுதிக் கட்ட ஈழப் போரின்போது, ஏக்கப் பெருமூச்சுடனும் கலக்கம் மிகுந்த  கண்களுடனும் மக்கள் தவித்துக்கொண்டு இருந்தனர். 'என்ன நடக்கிறது?’ என்பதே அவர்களுக்குப் புரியவில்லை.
  • ஆவேசத்தில் மக்கள்... பிடிபட்ட புலிகள்! 
  • கொல்லப்பட்ட தலைவர்கள்!
இந்தத் துயரப் பயணத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் பலர். குண்டுப் பொழிவுக்கு பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட நேரம் இல்லை. அவை அப்படியே பாதையில் கிடக்க... எங்கும் பிண வாடை. வேகமாக நடக்க முடியாத முதியவர்கள், குடும்பத்தினரைப் பிரிந்தனர்; காயமடைந்தவர்களோ, வலி தாளாமல், வழியிலேயே விழுந்துவிட்டனர். ஆதரவற்ற இவர்கள் முன்னேறிச் செல்லும் மக்களிடம் உதவி கேட்டு அபயக் குரல் எழுப்பியும், பரிதாபப்பட்ட மீதி மக்கள் அதைக் கேட்காததுபோல், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர்.

'புலிகள் தரப்பினர் சரண் அடையும்போது, மத்தியஸ்தர்கள் யாரும் உடன் வரக் கூடாது!’ என்ற நிபந்தனைக்கும் புலிகள் சம்மதித்தனர். சிங்கள ராணுவத்தினர் தெரிவித்த வழித்தடத்தில், மே 18-ம் தேதி, புலிகளின் தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடியோடு வந்தனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே, அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதுபற்றி சிங்கள ராணுவத்தின் தரப்பில் இருந்து தினமும் ஒவ்வொரு தகவலாக தெரிவிக்கப்பட்டபோதிலும், நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) அந்தச் சமாதானங்களை ஏற்கவில்லை. சரண் அடைய முன்வந்த புலிகளை சிங்கள ராணுவம் திட்டமிட்டுக் கொன்றுவிட்டதாகவே கருதுகிறோம்...............திடீர் தொடர் 4


தமிழன் குரல் - தமிழகத்திலிருந்து
- துயரங்கள் தொடரும்...           நன்றி   ஜூனியர் விகடன் 

No comments:

Post a Comment