ஈழம்.. கொடூரமும் கொலையும்! - அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் - 03
'இலங்கை அரசால் பாதுகாப்பான பகுதி’ என்று அறிவிக்கப்பட்டதாகப் பொய் சொல்லி, அப்பாவி மக்களைக் கொன்றொழித்த சிங்கள ராணுவத்தின் காட்டு தர்பார் அங்கு இருந்த மருத்துவமனைகளையும் விட்டுவைக்கவில்லை!
நொந்துபோன நோயாளிகள்!
போரில் கை, கால்களை இழந்தவர்கள்... உடல் முழுவதும் எரிந்துபோனவர்கள்... முகம் சிதைந்து உருக்குலைந்தவர்கள் போன்ற எண்ணற்றவர்களால், மருத்துவமனைகள் ஏற்கெனவே நிரம்பி வழிந்தன. பச்சிளம் குழந்தைகளும், பெண்களும் நரக வேதனையில் தவித்தனர்! மருத்துவமனைகளில் போதிய இட வசதியும் இல்லை; மருத்துவர்களும் இல்லை. எங்கு பார்த்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம்; மரண ஓலம்... படுக்கைகள், நோயாளிகளால் நிறைந்துவிட்டன. குண்டுக் காயங்களுடன் பலர் மேஜைகளுக்கு அடியிலும், நடைபாதையிலும், தரையிலும் கிடத்தப்பட்டனர். மருத்துவமனைக்கு வெளியே மரங்களின் அடியிலும் நோயாளிகள்... உயிருக்குப் போராடியவர்களுக்குக்கூட, மரக் கிளைகளில் தொங்கவிடப்பட்ட குளூக்கோஸ் பாட்டில்கள் மூலம் சிகிச்சை நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் வர, நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறியது மருத்துவமனை நிர்வாகம்.
அடுத்தடுத்து, மருந்துகளும் உபகரணங்களும் தீர... இருப்பதைக்கொண்டே வைத்தியம் செய்தனர் மருத்துவர்கள். உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு கொடுக்க மயக்க மருந்து இல்லை. வேறு வழியின்றி, வலியால் துடிதுடிக்க அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அத்தியாவசிய உபகரணங்கள் இல்லாததால், மாமிசம் வெட்டும் கத்தி மூலமாக சிதைந்த உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டன. துண்டிக்கப்பட்ட கைகள், கால்கள், உடல் உறுப்புகள் அனைத்தும் குவியலாகக்கிடந்தன......................... திடீர் தொடர் - 03
No comments:
Post a Comment