திடீர் தொடர் 05

ஈழப் போரின் ஆரம்பத்தில் இருந்தே... 'புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்’ என்பதை
சிங்கள இராணுவம் வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்று, கடைசிக் கட்டப்போரின்போது, சரணடைய முன்வந்த முன்னணித் தலைவர்களைக் கொடூரமாகத் திட்டமிட்டுக் கொன்ற இராணுவம், அதற்குப் பின்னரும் பல்வேறு அத்துமீறல்களை அரங்கேற்றியது.இந்தக் கொடுமைகள் தொடர்பாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
புலிகள் பலவீனம் அடைந்ததும், சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அப்பாவி மக்கள் அதிக அச்சத்துடனேயே சென்றனர். அதை நிரூபிக்கும் வகையில், அவர்களை இராணுவம் சந்தேகத்தோடு பார்த்து கொலைகள் செய்தது. நிறையப் பெண்கள் புதிய விதவைகளாக மாறிவிட்டனர். அழவும் முடியாமல், அலறவும் முடியாமல் அவர்கள் நிலை குத்திய கண்களோடு வானத்தைப் பார்த்தனர்................. திடீர் தொடர் 5
No comments:
Post a Comment