Translate

Monday 16 May 2011

லண்டனில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

 LEADER OF EALING COUNCIL COUNCILLOR JULIAN BELL  SUPPORTS TAMILS STRUGLE IN SRI LANKA.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்நிகழ்வு நேற்று லண்டனில் எழுச்சியுடன் நடைபெற்றது.


லண்டனில் உள்ள Greenford Town Hall மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுடரினைநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் திருருத்திராபதி சேகர்பிரித்தானியத்தொழில்கட்சி உறுப்பினரும்பாராளுமன்ற உறுப்பினரும்தமிழர்களின் விடுதலைக்காக தொடர்ந்துகுரல் கொடுத்துவருபவருமான திருவிரேந்திர சர்மாமற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கஉறுப்பினர்களான திருமதிபாலாம்பிகைதிருசெல்வராஜாதிருமனோரஞ்சன் ஆகியோர்ஏற்ரிவைத்தனர்.


தொடர்ந்து ஈகைச்சுடரினை 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினருடனானசமரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர் லெப்ரினன் ஜீவன் அவர்களின் சகோதரி அவர்கள்ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடரேற்றலைத் தொடர்ந்து இதுவரைகாலமும் போரினால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும்,தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும்தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்விற்காகவும் போராடிவீரமரணம் அடைந்த மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வும்நினைவுரைகள்மற்றும் கவிதைகள் எனபன இடம்பெற்றது.இதன் போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியீடான திருசுதன்றாஜ் அவர்களின்எழுத்துருவில் உருவான "தமிழீழத் தேசியத் துக்க நாள் தனிலே தமிழர் நாம் ஒன்றுபடுவோம்"எனும் பாடல் ஒலிக்கவிடப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள்மற்றும் நகரசபை உறுப்பினர்களும் (MR BIRENDER SHARMA MP EALING AND SOUTHALL (LABOUR),   MR JULIAN BELL COUNCIL LEADER FOR EALING COUNCIL, MR JAMES ALLIE BRANT COUNCILLOR ALSO CANDIDATE FOR 2010 GENERAL ELECTION (LIBERAL DEMOCRAT), MR M.SIVARAJAH COUNCIL CANDIDATE FOR 2010 BRANT COUNCIL (LIBERAL DEMOCRAT),MR SURSH HARROW WEST COUNCILLOR (LABOUR), MRS SASIKAL SURSH HARROW WEST COUNCILLOR - LABOUR, MR S.SELVATHURAI (SIVA) CANDIDATE FOR 2010 HARROW WEST COUNCIL ELECTION - CONSERVATIVE)   வருகைதந்திருந்ததோடு நினைவுரைகளையும் வழங்கினர்.

இந்த நிகழ்வில் "தமிழினப் படுகொலைகள் -1956-2008" எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.இந்த வரலாற்று நூலை மேடையிலேயே அதிகளவான மக்கள் வாங்கிச்சென்றதை காணமுடிந்தது.
             http://youtu.be/dlflCkq6Xe0
             http://youtu.be/nblQPwhSMd8
             http://youtu.be/JwlCFRbTc_M
  

No comments:

Post a Comment