சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை !
இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந் தமீழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. சு.ப.தமிழ்ச்செல்வன் 02.11.2007 ஆம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியானார்.
அவரின் மனைவியும் பிள்ளைகளும் யுத்ததத்தின் இறுதிக்கட்டத்தில் வவுனியா அகதிகள் முகாமுக்கு இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் படையினர் அவர்களை தடுத்துவைத்திருந்தனர்.
இந் நிலையில் அவர்களை தாம் நிபந்தனை அடிப்படையில் தாம் விடுவித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளபோதும் இதனைச் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.
No comments:
Post a Comment