பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் அப்பா இறந்ததை அடுத்து, பல நாட்டுத் தலைவர்களும் அவரைத் தொடர்புகொண்டு தமது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பாக் அதிபரின் அப்பா இறந்த செய்தியைக் கேள்வியுற்ற உடனே மகிந்தர் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல் ஆளாக துக்கம் விசாரித்துள்ளார் என பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
அக்பானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலில் துக்கம் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்கள் அழைப்புகளை மேற்கொள்ள முன்னரே மகிந்தர் முந்திவிட்டாராம் !
சமீபத்தில் இலங்கை சீனாவிடம் உதவிகோரியமையும், இலங்கையை சீனா ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் துக்கம் விசாரித்த மகிந்தரின் செயல்கள் இந்தியாவை மேலும் சீண்டிப்பார்க்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment