வன்னிச்சூழல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனததையே எனக்கு நினைவூட்டுகின்றது. - நிமல்கா
இலங்கையில் காலம் காலமாக அரச அமைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள மேலாதிக்கமே இனமுரண்பாட்டுக்கான காரணமாகும்.இலங்கையில் பல்வேறு இனங்கள் காணப்பட்டபோதிலும் ஒரு இனத்துக்கு அதிகளவான வளங்கள் பயன்படுத்தப்படுவதைக்காணலாம். யுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது விடுதலைசெய்யப்பட்டுவரும் பெண் போராளிகள் சமூகத்தில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்குள் உள்ளாக்கப்படுவதுடன் ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதை அண்மையில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் சனல் 4 தொலைக்காட்சி காட்டிய காட்சியை பார்த்து சிங்கள இனத்திலிருந்து வந்தவள் என்ற வகையில் வெட்கப்பட்டேன். மனித உரிமை செயற்பாட்டாளர்,அதுவும் பெண் என்ற வகையில் வேதனை அடைந்தேன். .................................read more
No comments:
Post a Comment