Translate

Sunday, 12 June 2011

தமிழக சட்டப் பேரவை தீர்மானம் எமக்கு கொழுகொம்பு சிறீதரன் MP


சென்னை வந்த  இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறீதரன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியபோது,
 
“இன்று கூட நாங்கள் செத்துக்கொண்டிருக்கின்றோம். எமது பெண்கள் 5 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அவ்வாறு கொல்லப்பட்ட 5 பெண்களின் உடலை எனது தொகுதியைச் சார்ந்த பகுதி ஒன்றில் இருந்து வெளியே எடுத்தனர்.அதனை அங்கேயே சிங்கள இராணுவத்தினர் கொளுத்திவிட முயன்றனர். நான் அங்கு சென்று தடுத்து நிறுத்தினேன். என்னைக் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டினர். நான் நீதிமன்றத்திற்குச் சென்று உத்தரவைப் பெற்று காவல் துறையினரை அழைத்துவந்து சடலங்களை எடுத்துக் கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்கள் யாவரும் பாலியல் வல்லுறவுக்குப் பின் கொல்லப்பட்டுள்ளனர். 

குழியில் இருந்து எடுத்த அந்த உடலங்களுக்கு புலிகளின் உடைகளுக்கும் திணித்து அவர்களை போராளிகள் என்று காட்ட இராணுவத்தினர் முயன்றனர், நாங்கள் அம்முயற்சியை தடுத்து நிறுத்தினோம். 

இரணைமாதா நகர் என்ற இடத்தில் 15 வயதிற்கும் உட்பட்ட 16 பெண்கள் இராணுவத்தினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கருவுற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று கன்னியாஸ்த்திரி மடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டவர்களாய் அவர்கள் அவமானத்தை சுமந்துகொண்டு உயிர் வாழ்கிறார்கள். அவர்களை பலாத்காரம் செய்த இராணுவத்தினர் சிலரின் டி சர்ட் உள்ளிட்ட ஆடைகளை ஆதாரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
புகழ்பெற்ற முருகண்டி பிள்ளையார் கோயில் முன்பு இருந்த திடல் இன்று இராணுவ முகாமாக மாற்றப்பட்டுவிட்டது. கொக்காவில் எனும் இடத்தில் மட்டும் 4 ஆயிரம் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
எங்கள் பூமியில் 100 மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம் உள்ளது. அங்கு சிவில் நிர்வாகம் இல்லை, எல்லாம் இராணுவம்தான். தமிழர் நிலத்தில் இராணுவ ஆட்சிதான் நடக்கிறது. 
 

No comments:

Post a Comment