Translate

Thursday, 28 July 2011

கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இறுதிப் போர் இடம்பெற்றதாக

கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இறுதிப் போர் இடம்பெற்றதாக 

கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இறுதிப் போர் இடம்பெற்றதாக தற்போது சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது.


இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட கோத்தபாய எந்த இழப்பு வந்தாலும் பரவாயில்லை யுத்தத்தை முடித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். சிறிய இடம் ஒன்றையே நீங்கள் கைப்பற்ற இருக்கிறது. அதனால் யாரைக் கொண்றாலும் பரவாயில்லை என அவர் அறிவித்துள்ளார். அத்தோடு மட்டும் நின்றுவிடாது, சரணடையும் போராளிகளையும் மற்றும் அரசியல் தலைவர்களையும் கண்ட இடத்தில் சுடுமாறும் இவர் கூறியதாக, ஷவேந்திர சில்வாவுக்கு மிக நெருக்கமன சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது இந்த உத்தரவுகளை கோத்தபாய நேரடியாக ஷவேந்திர சில்வாவுக்கு வழங்கும்போது அருகில் நின்ற சிப்பாய் ஒருவர் இப்போது சாட்சியாக மாறியுள்ளார். அவர் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையிலேயே இக் காணொளி தயாராகி சனல் 4 தொலைக்காட்சியூடாக வெளியாகியுள்ளது. இக் காணொளி காரணமாக இலங்கை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அத்தோடு மட்டுமல்லாது கோத்தபாய ஒரு போர் குற்றவாளி என நேரடியாக ஒரு சாட்சி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.


Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 16779 

No comments:

Post a Comment