Translate

Friday 26 August 2011

தமிழீழ காற்பந்தாட்டச் சுற்றுக் கிண்ணம் - 2011

கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் விளையாட்டுப் பிரிவு கனடியத் தமிழர் விளையாட்டுத்துறையுடன் இணைந்து நடத்திய மூன்றாவது தமிழீழ காற்பந்தாட்டச் சுற்றுக் கிண்ணம் சனிஆகஸ்ட் 20 ஆம் நாள் L'Amorouex விளையாட்டுத் திடலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பலரால் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்நிகழ்வில் 50 காற்பந்தாட்ட அணிகள் 7 பிரிவுகளில் தாங்கள்காற்பந்தாட்டத்தில் வைத்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் முகமாக கலந்து கொண்டனர்.போட்டியிடும் விளையாட்டு வீரருக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நூற்றுக்கணக்கானஇளையோரும் பெற்றோரும் நிகழ்விற்கு வருகை தந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டுகளில் இடம்பெற்றவாறு இவ்வாண்டும் சிறப்பாக விளையாடிய விளையாட்டுவீரருக்கு தமிழீழத் தேசியச் சின்னங்களின் பெயர்களில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழீழத் தேசிய மரமாகிய வாகையின் பெயரில் சிறந்த கோல் தடுப்பாளருக்கு (Goalieவிருதுவழங்கப்பட்டதுதமிழீழத் தேசிய விலங்காகிய சிறுத்தையின் பெயரில் சிறந்த விளையாட்டுவீரருக்கு (Best playerவிருது வழங்கப்பட்டது தமிழீழத் தேசியப் பறவையாகிய செண்பகத்தின்பெயரில் சிறந்த பந்து தடுப்பாளருக்கான (Best defenseவிருது வழங்கப்பட்டதுதமிழீழத் தேசியப்பூவாகிய கார்த்திகை பூவின் பெயரில் நேர்மையாகவும் பண்பாகவும் விளையாடிய விளையாட்டுவீரனுக்கு (outstanding sportsmanshipவழங்கப்பட்டது.  Most Valuable Player விருது 16வயதுக்குட்பட்டோர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட பிரிவுகளில் சிறப்பாக விளையாடியஒருவருக்கு வழங்கப்பட்டது.

வயதிற்கு உட்பட்டோர்
வெற்றியாளர்Cheetah
ஆம் இடம்Seelan Rangers

வயதிற்கு உட்பட்டோர்
வெற்றியாளர்Seelan Rangers
ஆம் இடம்Theepan

10 வயதிற்கு உட்பட்டோர்
வெற்றியாளர்Cheetah A
ஆம் இடம்Cheetah B

12 வயதிற்கு உட்பட்டோர்
வெற்றியாளர்Seelan Rangers
ஆம் இடம்Seawaves

14 வயதிற்கு உட்பட்டோர்
வெற்றியாளர்Theepan
ஆம் இடம்St. Anthony
கார்த்திகை பூ விருதுபெர்னாட்
வாகை விருதுதமிழரசன்
செண்பகம் விருதுபிரதீபன்
சிறுத்தை விருதுஇரஜீந்தா

16 வயதிற்கு உட்பட்டோர்
வெற்றியாளர்Scarborough Rangers
ஆம் இடம்Jarvis
கார்த்திகை பூ விருது: ???
வாகை விருதுபிரசாந்த்
செண்பகம் விருதுவிசாரன்
சிறுத்தை விருதுகபில்
Most Valuable Playerடிலன்

16 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டி:
வெற்றியாளர்Seawaves
ஆம் இடம்Scarborough Rangers
கார்த்திகை பூ விருதுரொசான்
வாகை விருதுசீலன்
செண்பகம் விருதுலோய்ட்
சிறுத்தை விருதுசசில்
Most Valuable Playerஜனார்த்தன்
இந்நிகழ்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய விளையாட்டுவீரர் பயிற்சியாளர்பார்வையாளர் நடுவர் தொண்டர் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழீழச் சுற்றுக் கிண்ணம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு:
தொலைபேசி647-865-2892
மின்னஞ்சல்info@ctya.org
இணையதளம்www.ctya.org
 
நன்றி
சஞ்சய்
தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்

-- 
Media Team
Tamil Youth Organisation - United Kingdom
 

"Truth is incontrovertible, malice may attack it and ignorance
may deride it, but, in the end, there it is." - Sir Winston Churchill

COPYRIGHT NOTE: ALL OUR VISUAL AND AUDIO MATERIALS ARE FREE TO USE ON ANY MEDIA.
IF YOU HAVE ANY QUESTIONS PLEASE CONTACT US. THANK YOU.

No comments:

Post a Comment