Translate

Monday 26 March 2012

How Thinakkathir twisted and massaged the news about Sumanthiran, MP


ஆசிரியர்   தினக்கதிர் 

எனது பின்னூட்டத்தை போடத் துணிவில்லையா? , இதுதான் நீர் வாய்கிழியப் பேசம் ஊடக அறமா? ,  இப்படி ஒரு கோழையாக இருப்பீர் என நான் கனவிலும் நினைக்கவில்லை! 

தமிழீழ புரட்சிகர மாணவர்கள் என்பது இணையதளத்தில் அவ்வப்போது வலம் வரும் அநாமதேயங்கள்.  அவர்கள் தமிழீழத்திலும் இல்லை, புரட்சியும் இல்லை, மாணவர்களும் இல்லை! 


நக்கீரன் 

டெயிலி மிறர் ஏட்டில் வந்த செய்தி தவறானது. இரண்டு மணித்தியாலம் சிங்களத்தில் கொடுத்த செவ்வியை திரிபுபடுத்தி டெயிலி மிறர் நிருபர் வெளியிட்டுள்ளார். அதனை வைத்து ததேகூ எதிரான தினக்கதிர் உட்பட சில இணையதளங்கள் தவறான செய்திகளை வெளியிடுகின்றன.


செவ்விக்குப் பின்னர் சுமந்திரனை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் வேறு வழியாக அவரை வீட்டுக்குக் கூட்டிப் போய் விட்டுள்ளனர். சுமந்திரன்  கொழும்பில் பிறக்கவில்லை. அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து யாழ்ப்பாணம் பரி யோவான்  கல்லூரியில் உயர்தர வகுப்பு மட்டும் படித்து பின்னர் அவுஸ்திரேலியாவில் படித்து  சட்டத்தில் பட்டம் பெற்றவர். 

தொழில் நிமித்தம் கொழும்பில் வாழ்கிறார். அப்படிப்  பார்க்கப் போனால் கஜேந்திரகுமார் குடும்பம் மூன்று தலைமுறை கொழும்பில் அதுவும் 
கருவாக்காட்டில் வாழ்கிறது. ஏன் தந்தை செல்வநாயகம், டாக்டர் இஎம்வி நாகநாதன்  போன்றோரும் கொழும்பில் தொழில் நிமித்தம் வாழ்ந்தவர்கள்தான். ஒருவர் எங்கு  வாழ்கிறார் என்பது முக்கியமல்ல. அவரது கொள்கை கோட்பாடு என்ன என்பதுதான்  முக்கியம். 

யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அல்பிரட் துரையாப்பா, டக்லஸ் 
தேவானந்தா போன்றோர் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லையா? காய்த்த  மரத்துக்குத்தான் கல்லெறி விழும் என்பது போல சுமந்திரன் போன்ற ஒரு அறிவிப்புப்  பிழைப்பாளர் மீது கல்லெறிகிறார்கள். இது படித்தவர்களைப் பிடிக்காத ஒரு கூட்டம் 
தமிழ்மக்களிடை இருப்பதைக் காட்டுகிறது. 

சுமந்திரன் நாடாளுமன்றத்தில் பேசும் போது இடை மறிக்கும் சிங்கள நாடாளுமன்ற  உறுப்பினர்கள் அவரை "கொட்டியா" "கொட்டியா" என்று கூச்சல் போடுகிறார்கள். சில  தமிழ் மூடங்களுக்கு மட்டும் அவர் துரோகியாகப் படுகிறார். 

இராசபக்சேயிடம்  சுமந்திரன் கோடிக்கணக்காக பணம் வாங்கிப் போட்டார் என்று சொல்பவர்கள்  மனநோயாளிகள். அந்த மனநோயாளிகளின் கழிசடை எழுத்தை பிரசுரித்து தினக்கதிர்  ஆசிரியர் மெத்த மகிழ்ச்சி அடைகிறார். கேட்டால் ஊடக சுதந்திரம் என்று சொல்வார். 

மகிந்த இராசபக்சேக்கு வக்காலத்து வாங்கும் - சிங்களவர் நடத்தும் - டெயிலி மிறர்  ஏட்டில் வந்த செய்தியை போட்டு மகிழும் தினக்கதிர் ஆசிரியரும் இராசபக்சேயிடம்  இருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு செய்தியைப் போடுகிறார் என்று  என்னாலும் ஒரு கடைந்தெடுத்த - அப்பட்டமான - பொய்யை எழுத முடியும். ஆனால் அது மூன்றாந்தர அரசியல். மஞ்சள் ஏடும் செய்யும் பணி. 
நக்கீரன் 


I find it extremely distressing that many friends in the Diaspora are so 
quick to find fault! One must listen to my 2hr interview, that too in 
Sinhala, before commenting. 

My message was to a Sinhala audience, which is very important at this stage. I stated many things which most people would be frightened to even whisper in Sri Lanka today. 


After the interview, my security personnel took me through a different route because they had listened to the interview and thought that I would be attacked. Raviraj was killed just after an interview to this station. Yesterday his wife called and cautioned me to be careful... When such is the state of affairs here, people who live abroad don't seem to appreciate the very difficult task we have to perform, living in SL, to win back the rights of our people. 


Please give us that space, without being suspicious of everything. We will never 
betray our people. And Thangavelu Aiya, thank you for reposing so much of 
confidence in me. I will continue to act ONLY in the interests of our people. 

Sumanthiran 
Sent via BlackBerry® from Dialog  




பெருமளவிலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர்- நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்!

No comments:

Post a Comment