Translate

Wednesday 28 March 2012

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்


உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெர்மி பிறவுண் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.


 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் மூலம்இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உலக நாடுகள் காட்டி வரும் கரிசனை தெளிவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
மனித உரிமைப் பாதுகாப்பு தொடர்பில் பிரித்தானியா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு குறிப்பிட்டள்ளார். 

No comments:

Post a Comment