Translate

Friday 26 August 2011

ஜாக்: எங்களில் ஓருவன்

கனடிய வரலாற்றிலேயெ கட்சி பேதங்களின்றி நினைவு கூரப்படும் ஜாக்கின் இறுதிநிகழ்வு நாளில் நாம் எமது சமூகத்தின் நண்பனான, வழிகாட்டியான, எமது நாயகனான ஜாக்கிற்கு ஒருமித்த தமிழ் சமூகமாக ஓரணியில் நின்று எமது மரியாதையையும், அங்சலியையும் செலுத்த வருமாறு அழைக்கின்றோம்.



Dear Friends,
Tamil Workers’ Alliance is holding a Tribute to Jack Layton, Leader of the Official Opposition and New Democratic Party (NDP) of Canada on Saturday 27th, 2011 at Albert Campbell square in Scarborough.
Jack was a fierce and resolute warrior of the working class, a passionate human rights activist and a champion for the poor and the marginalised.
Jack was known to our community from the mid- 1990’s, and from then on became more closely involved with us. He was very supportive of the issues that our community faced here in Canada and also of our peoples’ struggle for justice in the Tamil homelands in Sri Lanka.
For Tamils, Jack was one of ours. Today we have lost our good friend and a strong leader of the nation.
In 2009 when other parties and politicians turned their backs on us and our call to save our sisters and brothers from the bloodbath in Sri Lanka, it was Jack the Warrior alone who stood with us, and added his voice to ours in calling for justice for Tamils in Tamil homeland. Most recently, he worked with us to help achieve the representation of Tamil Canadians in federal politics through the election of the first Tamil MP to sit in the Parliament of Canada.
Today we stand together as the Tamil community to honour a hero, and to pay tribute to a brother.
The Tamil Workers Alliance invites all organizations, groups and individuals to join us.
If your organization or group wishes to endorse this event, please contact the Tamil Workers Alliance at 647-627-3572tamil.workers@gmail.com
Venue: Albert Campbell Square
Time: Saturday 27th August, 2011 at 7PM



ஜாக்: எங்களில் ஓருவன்
நண்பர்களே,

மறைந்த எதிர்க்கட்சித் தலைவரும், NDP கட்சித் தலைவருமான ஜாக் லெயிற்றன் அவர்களுக்கான அங்சலிக் கூட்டம் தமிழ்த் தொழ்லாளர் ஒன்றியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை, ஆகஸ்ட் 27ஆம் திகதி மாலை 7மணிக்கு ஸ்காபரோ Albert Cambell சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

உழைக்கும் மக்களிற்காகப் போராடுபவனாகவும், ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட மனிதவுரிமைச் செயற்பாட்டளானாகவும் விளங்கிய ஜாக் ஏழைகள், மற்றும் ஒதுக்கப்பட்டோருக்காக முன்னின்று உழைப்பவராகவும் விளங்கினார்.

1990களின் நடுப்பகுதியில் தமிழ் சமூகத்துடன் அறிமுகமாகிய ஜாக் அன்றிலிருந்து தமிழ்ச் சமூகத்துடன் மிகவும் நெருங்கிச் செயற்பட்டும் வந்தார். கனேடியத் தமிழ் சமூகமாக நாம் கனடாவில் எதிர் கொண்ட பல்வேறு சவால்களில்; எமக்கு மிகவும் ஆதரவாக இருந்து வந்ததுடன், இலங்கைவாழ் தமிழ் மக்களது உரிமைக்கான போராட்டத்தின் ஆதரவாளராகவும் திகழ்ந்தார்.

என்றும் எங்களில் ஒருவனான ஜாக்கை நாம் இன்று இழந்து நிற்கின்றோம். தமிழ் சமூகம் தனது நல்ல நண்பனை இழந்து நிற்கின்றது. கனேடியர்களாக  நாம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றோம்.

கனடியத் தமிழர்களது வரலாற்றில் மிகவும் துன்பமான, சோதனையான 2009ஆம் ஆண்டுக் காலங்களில் எமது உறவுகள் மீதான இனப் படுகொலையை தடுத்து நிறுத்த நாம் ஒருங்கே தமிழ் சமூகமாக அனைத்து ப் போராட்டங்களினோடும் தவித்தக் கிடந்த போது, எம்மை மற்றைய அரசியற் கட்சிகளும், அதன் தலைவர்களும் எமது போராட்டங்களில் கலந்து கொள்வதை தீண்டத்தகாததாகப் பார்த்த வேளைகளில் ஜாக் - அடக்கப்படும் மக்களுக்கான போர்வீரன்- ஒருவன் மட்டுமே எம்முடன் நின்றான் எமக்காக பாராளுமன்றக் கதவைத் தாண்டியும் வந்து குரல் கொடுத்தான்.

தொடர்ச்சியாக எமது சமூகத்தின் மீது அக்கறையைக் கொண்டிருந்த ஜாக், கனேடிய அரசியலில் எமது சமூகத்திற்கான அரசியல் அந்தஸத்தை பெற்றுக் கொடுத்த கடந்த கனடியப் பொதுத் தேர்தலில் எமது சமூகத்தின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். தான் கொண்டிருந்த நோயைப் பொருட்படுத்தாமல், காட்டிக் கொள்ளாமல் கட்சியின் வெற்றிக்காக உழைத்து வந்த ஜாக் நாடளாவிய ரீதியில் அனைத்து ஊடகங்களாலும் சூழப்பட்டு பிரபல்யம் பெற்றிருந்த வேளையிலும் கூட எமது வெற்றியை நிச்சயப்படுததும் உறுதியுடன் தனது நாடளாவிய பிரச்சார நடவடிக்கையை எம்மிடம் வந்து எம்முடன் நின்றே முடித்து வைத்தார். ஜாக்கினது எம்முடனான இறுதித் தேர்தல் பிரச்சார நிகழ்வே முதல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் வரவை உறுதிப்படுத்தியது.
நண்பர்களே,
கனடிய வரலாற்றிலேயெ கட்சி பேதங்களின்றி நினைவு கூரப்படும் ஜாக்கின் இறுதிநிகழ்வு நாளில் நாம் எமது சமூகத்தின் நண்பனான, வழிகாட்டியான, எமது நாயகனான ஜாக்கிற்கு ஒருமித்த தமிழ் சமூகமாக ஓரணியில் நின்று எமது மரியாதையையும், அங்சலியையும் செலுத்த வருமாறு அழைக்கின்றோம்.

இவ் அங்சலி நிகழ்வினை endorse பண்ண விரும்பும் ஸ்தாபனங்கள், குழுக்கள் தமிழ்த் தொழிலாளர் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Tamil Workers Alliance
TEL: 647-627-3572
Email: tamil.workers@gmail.com

No comments:

Post a Comment