 ஊர்காவற்றுறை காளி கோவிலடியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மதகுரு ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை காளி கோவிலடியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மதகுரு ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளது.அப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஐயர் இராஜசேகரசர்மா (வயது-31) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
சடலத்தை ஊர்காவற்றுறை நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா நேரில் சென்று பார்வையிட்டார்.
ஊர்காவற்றைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது மரணம் தொடர்பில் மர்மம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
 
No comments:
Post a Comment