Translate

Monday 26 September 2011

ஜெனீவா குறிப்புகள்


ஜெனீவா குறிப்புகள்

சுனந்த தேசப்பிரிய , 25 செப்டம்பர் 2011

பரபரப்புச் செய்திகளை வெளியிடும் செய்தியாளர்கள் இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகத் தீர்மானகரமான வாரங்களாக இருக்கும் என கூறியிருந்தனர். மனித உரிமைப் பேரவையின் 18ஆவது கூட்டத்தொடர் கடந்த 12ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகியது. இம்முறை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை சம்பந்தமாக உண்மையில் எவ்வித விசேட குறிப்புகளும் உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை.

இம்முறை கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் இலங்கை சம்பந்தமான தனது ஆலோசனை அறிக்கை மற்றும் இலங்கையின் பதிலாகக் கருதக்கூடிய அறிக்கைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பப்பட உள்ளதாக கடந்த வாரத்திற்கு முன்னர் அறியக்கிடைத்தது.

எனினும், அந்த அறிக்கை கூட்டத்தொடரில் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் காலமோ, விதிமுறைகளோ இருக்கவில்லை. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக அக்கறை செலுத்தும் பல நாடுகள் இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவிற்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்குவது அவசியம் என நினைக்கின்றனர்.

இதனால் இந்த ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் இதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள மனித உரிமைகள், மீறப்பட்டமை சம்பந்தமாக பதில் யோசனைகளை முன்வைக்கலாம் என அந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன. இந்த நிலைமையின் கீழ், இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமாக தீர்மானகரமான கலந்துரையாடல்களுக்கோ அதற்கான பின்னணிக்கோ மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தயார் நிலைகள் இருக்கவில்லை.

இவ்வாறான நிலையில், கடந்த சில வாரங்கள் தொடர்பாக பிரசார ரீதியாக மேற்கொள்ளப்படும் உள்நோக்கமானது இலங்கைக்கு எதிரான சகல முயற்சிகளையும் அவ்விடத்திலேயே தோற்கடிப்பதற்கான பின்னணியை உருவாக்கியதாக அனுமானிக்கக் கூடியதாக இருக்கிறது. எவ்வாறாயினும், ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் 18ஆவது கூட்டத்தொடரில் தமது நிலைப்பாடுகளை உறுதிப்படுத்த அமைச்சர் சமரசிங்க தலைமையில் சென்றிருந்த உயர் மட்டப் பிரதிநிதிகளுக்கு முடிந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கையின் யுத்தத்தில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கலந்துரையாடுவதற்கு இலங்கை கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்தது.

எனினும், இந்த விடயத்தை பகிரங்க கூட்டத்தில் கலந்துரையாடாது அதனை கூட்டத்தொடரின் இடைநடுவே இந்த விடயத்தைக் கலந்துரையாடவே பேரவை நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த விடயங்களுக்குள் விளங்கி கொள்ளமுடியத மறு எதிர்ப்புகள் உள்ளன.

இந்த விடயம் கடந்த 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தின் ஜெனிவா தூதரகத்தினால், மனித உரிமை பேரவையின் உணவு இடைவேளையின் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது எழுப்பபட்டது.


27 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி இந்த விடயத்தை எழுப்பி உரையாற்றினார். இலங்கை தொடர்பான இந்த கலந்துரையாடல் பேரவையின் கூட்டத்தல் மேற்கொள்ளப்படுவதை காணவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என அவர் கூறினார்.

அத்துடன் இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது பகிரங்கமாக வெளியிடப்படும் என்பதை அறிந்து கொள்ள விரும்புதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அது குறித்து விசேட அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அந்த அறிக்கை மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட்டு, விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் மகிந்த சமரமசிங்கவினால் வழி நடத்தப்படும் பிரதிநிதிகள் குழுவில் உள்ள முன்னாள் சட்டமா அதிபர் மெஹான் பீரிஸ் பதிலளித்தார்.எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பகிரங்கப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை இலங்கை பிரதிநிதிகள் வழங்காமல் இருக்கும் வகையில் தம்மை தற்காத்துக்கொண்டனர். அறிய கிடைத்துள்ள வகையில் இந்த தீர்மானத்தை எடுக்கும் முழுப் பொறுப்பும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கையிலேயே இருகின்றது.

இந்த கலந்துரையாடலில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை குறித்து தெளிவுப்படுத்துவதே பிரதான தொனிப்பொருளாக மாறியிருந்தது. முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பிரிஸின் கருத்து படி தற்போது அவசரகாலச் சட்டம் மரித்து போன ஒன்று. பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதிதாக சில விதிகள் சேர்க்கப்பட்ட போதிலும் அதன் மூலம் அவசரகாலச் சட்ட விதிகள் முழுமையாக சட்டமயமாகது என்பதே அவரது நிலைப்பாடாகும்.

அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாத உலக தமிழர் பேரவையின் தலைவர் போதகர் இம்மானுவேல், பயங்கரவாத தடைச் சட்டம் இருக்கும் வரை,அவசரகாலச் சட்டத்தை நீக்கியதால் பயனில்லை எனத் தெரிவித்தார்.


செனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணப்படத்திற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் தயாரித்த 'புனைந்து பரப்பப்படும் பொய்கள்' என்ற விவரணப்படத்தின் 17 நிமிடங்கள் கொண்ட ஒரு பகுதி இந்த கூட்டத்தில் காண்பிக்கப்பட்டது. இந்த படத்தின் குறுந்தகடு மற்றும் 5.2 கிலோ கிராம் எடைக்கொண்ட ஆவணங்கள் கலந்துக்கொண்டவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.இலங்கையின் இந்த விவரணப்படம், இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்திற்கு பல சாவல்களை ஏற்படுத்தும் என்பது உண்மையே( இந்த திரைப்படத்திற்காக தமிழ்ச் செல்வனின் மனைவிக்கு குரல் கொடுத்த பெண் தமிழ் விதவை பெண்கள் நெற்றில் பொட்டு வைக்க மாட்டார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை)

நேரம் தொடர்பான பிரச்சினை காரணமாகவே திரைப்படத்தை முழுமையாக காண்பிக்க முடியாது போனதாக கூறிய அமைச்சர் சமரசிங்க கருத்துக்களை தெரிவிப்பதற்கான பகிரங்க விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.


திரைப்படம் தொடர்பாக கருத்து வெளியிட்ட மனித உரிமைகளுக்கான தமிழ் ஒன்றியத்தின் தலைவர் கிருபாகரன், இந்த இரண்டு திரைப்படங்களும், ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான நிலைப்பாடுகளை முன்வைப்பதால், இது குறித்து சுதந்திரமான அனைத்துலக விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றது என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை போதகர் இம்மானுவேலும் எழுப்பினார்.

இதன் போது கருத்து வெளியிட்ட மொஹான் பீரிஸ், 500 வருட ஏகாதிபத்திய அடிமை ஆட்சிக்கு தொடர்ந்தும் எதற்கு தேவைப்படுகிறது என கூறினார். இதன் மூலம் அனைத்துலக விசாரணை என்பது ஏகாதிபத்திய அடிமை ஆட்சி கருதியுள்ளார்.

எனினும் இவ்வாறான விசாரணை பாலஸ்தீன பிரச்சினை, மியன்மாரின் இராணுவ ஆட்சி போன்ற பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்புகளை வழங்கியிருப்பதாகவும் கூட்டத்தின் நடைபெற்ற தேனீர் கலந்துரையாடலின் போது நடந்த கலந்துரையாடலில் கேட்க கிடைத்தது.

இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வெளிநாடுகளில் உள்ள குறிப்பிடதக்களவானவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஜனாதிபதி பிரேமதாச ஆட்சியின் போது அரசாங்கத்தின் டெய்லி நியூஸ் பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மகிந்தபாலவும் இவர்களில் அடங்குகிறார். இவர் தொடர்ந்தும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திற்கு கட்டுரைகளை எழுதி வருகிறார். இலங்கை அரசாங்கத்தின் திரைப்படத்திற்கு சார்பாக கருத்து வெளியிட்ட அவர், 1988 ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்திய அமைதிப்படையினர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்திய அமைதிப்படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு ஏன் அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக குறுகிட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்ததாகவும் இந்திய அமைதிப்படையினர் தாம் செய்ய வேண்டியிருந்த கடமைகளையே செய்ததாகவும் குறிப்பிட்டார். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என குறிப்பிட்ட அமைச்சர், இந்திய அரசாங்கம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு விரோதங்கள் இல்லை என சுட்டிக்காட்டினார்.

வேறு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்க அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற இந்தியாவை போன்று உதவி நாடு இல்லை எனவும் இதற்காக இ;நதியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் மீண்டும் இந்தியா அரசாங்கத்தை பாதுகாத்து கருத்து வெளியிட்டார்.

இலங்கை அரசாங்கத்தின் இப்படியான கூட்டங்களில் கலந்துக்கொண்ட கியூபா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் பிரதிநிதிகள் இரண்டு மூன்று வார்த்தைகளில், தாம், இலங்கை தமது கடமையை நிறைவேற்ற தாம் இலங்கையுடன் இருப்பதாக கூறினர்.அந்த சந்தர்ப்பத்தில் அதுது அப்படியே நடந்தது. இந்திய பிரதிநிதி எதனையும் கூறாது தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

மனித உரிமை பேரவையில், இலங்கை சம்பந்தமாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்தியாவின் நிலைப்பாடே தீர்மானகரமானது என்பதையே
அமைச்சர் சமரசிங்க, இந்தியாவை பாதுகாக்கும் கருத்துக்களின் உண்மை நிலைப்பாடாகும்.

இலங்கையுடனான பிரச்சினைகளை இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, பேசுவது என்பதே இதுவரை இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை சம்பந்தமாக ஏற்படும் எந்த தீர்மானகரமான கலந்துரையாடல்களின் போது, இந்திய நிலைப்பாட்டின் முக்கியத்துவ அனைத்து தரப்பினரும் தற்போது உணர்ந்து கொண்டுள்ளனர்.

அரசியல் மோடைகளில் அமைச்சர்கள் விமல் வீரவங்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை கொண்டு இந்தியாவை கடுமையாக விமர்சிக்கும் இலங்கை அரசாங்கம், ராஜதந்திர ரீதியில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவ இலங்கை அரசாங்கத்தின் இரண்டை நிலைப்பாடுகளாகும். அசாங்கத்தின் பிரசாரகர்களான மகிந்தபாலவின் விமர்சனத்தைக் கூட பலர் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதினர்.

மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஏன் கலந்துரையாடுவதில்லை எனவும் 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தாதது போல், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் பகிரங்கப்படுத்தாமல் போகுமோ என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஜெனிவா தலைவர் பீட்டார் ஸ்பிலின்டர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மொஹான் பீரிஸ் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு உத்தரவுகளை பிறப்பிக்க மன்னிப்புச் சபைக்கு எப்படி உரிமை இருக்கிறது எனக் கூறினார். இலங்கைக்கு 2 ஆயிரத்து 500 வருடகால வரலாறு இருப்பதால், வெளியாரின் ஆலோசனைகள் அத்தியவசியமற்றது எனவும் மொஹான் பீரிஸ் குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் தலையீடுகளை மேற்கொண்டன மோடையில் அமர்ந்திருந்த மாலைத்தீவு ஜனாதிபதி மொஹட் நஷீட், இலங்கையின் இனங்களுக்கு இடையில் மாத்திரமல்ல, மன்னிப்புச் சபைக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலும் நல்லிணக்கம் அவசியம் என தமக்கு தெரிவதாக கூறினார்.

சிறந்த வார்த்தைகள் பிரயோகிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், மனித உரிமை தொடர்பில் பாரிய பங்களிப்புகளை செய்து வரும் மன்னிப்புச் சபை, மனசாட்சியின் சிறை கைதி என பெயரிட்டு, இயங்கி வருவதுடன் தனது விடுதலைக்கும் பாரிய பங்களிப்பை வழங்கியதாக குறிப்பிட்டார்.


இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக கனடாவில் இருந்து சென்றிருந்த இர்னோ, நாடு, இரண்டு பகுதிகளாக இருப்பது அத்தியவசியமற்றது எனக் தெரிவித்தார். அதிகாரத்தை பரவாக்குவதற்கான எதிர்ப்பு அவரின் கூற்றில் காணப்பட்டது.

இறுதியில் சுருக்கமான உரையாற்றிய அமெரிக்க தூதுவர், ஹெலின் செம்பர்லின், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, யுத்தம் சம்பந்தமாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை உரிய முறையில் செவி கொடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறில்லாது போனால், இலங்கை எதிரான அழுத்தங்கள் அதிகரிக்க கூடும் என தெரிவித்தார்.

இறுதியில் வடை மற்றும் பெட்டிஸ் விருந்தை முடித்து கொண்டு திரும்பிச் சென்ற மனித உரிமை செயற்பட்டாளர் தனது தோளில் 5.2 கிலோ கிராம் ஆவண புத்தகங்களை சுமந்த சென்ற தரம் குறைந்த துணியால் ஆண பொதியின் பட்டி திடீரென கழன்று கிழே விழுந்தது. அந்த பொதியில், ஆசியாவின் ஆச்சரியம் இலங்கை என அச்சிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment