Translate

Friday 16 September 2011

புலம்பெயர் தமிழர்கள், விடுதலைப்புலிகளை தீவிரமாக...

புலம்பெயர் தமிழர்கள், விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரிப்பது ஏன்?
இந்தக் கேள்விக்கு, பலருக்கு பதில் தெரியாமல் இருக்கலாம்! ஆனால் அனைவரும் இதனை அறிந்துகொள்ள வேண்டும்! இலங்கையில் மஹிந்த ராஜபக்ச தொடக்கம், சாமானிய சிங்களவன் வரை பலருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது! 



தமிழீழ தேசியத் தலைவர்
சிங்களவருக்கு சந்தேகம் இருப்பது ஒருபுறமிருக்க, எமது தமிழ் உறவுகள் பலருக்கும் இப்போது இந்தச் சந்தேகம் வலுவாக இருக்கிறது! சிலர் இணையத்தளங்களிலும், வலைப்பூக்களிலும், ஃபேஸ்புக்,டுவீட்டர் போன்ற சமூகத்தளங்களிலும் இதுபற்றி எழுதிவருகின்றனர்!

இலங்கையில் இருப்பவர்கள், புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து

“ உங்களுக்கு என்ன தெரியும் இங்குள்ள சூழல் பற்றி? நீங்கள் பாதுகாப்பான நாடுகளில் வாழ்ந்துகொண்டு, எம்மை பலிக்கடா ஆக்குகிறீர்கள்!”

என்று குற்றம் சாட்டுவதும்,

அதற்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களைப் பார்த்து

“ நீங்கள் இப்போது அரசுக்காக கதைக்கிறீர்களா? துரோகிகள் ”

என்று திட்டுவதுமாக, நாட்டு நடப்பு போய்க்கொண்டு இருக்கிறது!

லண்டன் மாநகரம்

இப்படியே இருதரப்பாரும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருந்தால், இதற்கு முடிவேது? ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கல்லவா கொண்டாட்டம்! நாம் ஒவ்வொரு முறையும் சண்டையிடும் போதும், அது யாரோ சிலருக்கு நன்மையைக் கொடுக்கிறது அல்லவா? எனவே நாம் சண்டை போடலாமா?

இந்தப் பிரச்சனைக்கு இன்றோடு தீர்வுகாணலாம் என்று நினைக்கிறேன்! எனவே, எதற்காக புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்றனர்? என்பதை இங்கே விபரிக்கிறேன்!

ஒருவன் நாட்டை விட்டு வெளியேறும் போது, அதாவது அவனைச் சுமந்துகொண்டு, விமானம் மேலே பறக்கும் அந்த நிமிஷம் தொடக்கம், அவனுக்கு நாட்டின் மீது, இனம் புரியாத ஒரு பற்று வந்துவிடு்ம்! ஊரில் இருக்கும் போது, எப்போது வெளிநாடு செல்வேன்? என ஏங்கும் ஒருவனது மனம், நாட்டைவிட்டு, வெளியேறிய கணத்தில் இருந்து நாட்டுப்பற்றாக மாறிவிடுகிறது!

பாரிஸ் மாநகரம்

இது ஒரு சிம்பிள் உளவியல்! இப்படி ஒரு ஈழத்தமிழன், லண்டனுக்கோ, ஃபிரான்சுக்கோ, கனடாவுக்கோ வந்து சேரும் போது, அவனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது! அதுதான் மேற்கு நாடுகளின் சுதந்திரம்! முதல் முறையாக, சுதந்திரம் என்றால் என்ன என்பதை கண்கூடாக, கண்டு அனுபவிக்கும் ஒருவனுக்கு, கூடவே ஒரு சின்னக் கவலையும் வந்துவிடுகிறது!

அது என்னவென்றால், தான் அனுபவிக்கும் சுதந்திரம், ஈழத்தில் இருக்கும் தனது சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் என எவருக்குமே கிடைக்கவில்லை என்பது! அன்றில் இருந்து, அவன் முன்பைவிட அதிகமாக தாய்நாட்டை நேசிக்க ஆரம்பிக்கிறான்!

“ ஊரில் இருக்கும் வரை வராத நாட்டுப்பற்று, வெளிநாட்டுக்குச் சென்றவுடன் பொத்துக்கொண்டு வந்துவிட்டதோ? ”

என்று அங்கிருப்பவர்கள் சீறுவது இதனால்தான்!

ஃபிரெஞ்சுப் போலீசார்!

ஆம், எவன் ஒருவன் தனது தாய்நாட்டை விட்டு, வெளிநாடு செல்கிறானோ, அவனுக்கெல்லாம், தனது நாட்டின் மீது பெரும் பற்று வருவது இயற்கையானது!

அடுத்ததாக, வெளிநாட்டுக்கு வந்தவன்,
இங்குள்ள சாலைகளையும்,
கட்டடங்களையும்,
மக்களின் வாழ்க்கையினையும்,
பொருளாதாரத்தினையும் உற்று நோக்கும் போது, அவன் ஆச்சரியமடைகிறான்! ஈழத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கும், இங்குள்ள வாழ்க்கைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பது அவனது முடிவாகிறது!

மனிதநேயம் மிக்க மனிதர்கள்,

அரசாங்கத்தில் செல்லமான அரவணைப்பில் வாழும் மக்கள்,

ஒவ்வொரு குடிமகனையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் அரசாங்கம்,

ஊழல் செய்யாத அதிகாரிகள்,

படிப்பறிவுள்ள அமைச்சர்கள்,

லஞ்சம் வாங்காத அரச அதிகாரிகள்,

மேற்கு நாட்டு மக்களோடு சரிநிகர் சமானமாக நடத்தும் பண்பு,

யாருடைய விஷயங்களிலும் யாருமே தலையிடாத சமவுரிமை,

இப்படி எண்ணிலடங்காத ஆச்சரியங்களை ஒரு சராசரி ஈழத்தமிழன் அனுபவிக்கிறான்!

தமிழீழ காவல்துறை வீரர் ஒருவர்

மொத்தத்தில் சொர்க்கலோகம், தேவலோகம் என எல்லாவற்றையும் கண்ணுக்கு முன்னால் கண்ட உணர்வில் திளைக்கிறான்! இந்த நேரத்தில்தான் அவனுக்கு, இலங்கை அரசின் மீது பொல்லாத கோபம் வருகிறது! எவ்வளவு கவனமாக, தனது குடிமக்களை காக்கவேண்டிய இலங்கை அரசு, மக்களை இப்படியெல்லாம் ஏமாற்றுகிறதே என்று அவன் கொதிப்படைகிறான்!

மேலும், அவனது மனக்கண் முன்னே,

துப்பாக்கிகள் ஏந்திய ராணுவத்தினர்,

தனியாகச் செல்லும் பெண்ணை விட்டுதுரத்தும் காமுகர்கள்,

லஞ்சம் வாங்கும் அரச அதிகாரிகள்,

காரணமின்றிக் கைது செய்து, அடித்துச் சித்திரவதை செய்யும் பொலீசார், இதர ஆயுதக் குழுவினர்,

நகைகள் போடாமல் வெளியே போனால் மதிக்க மாட்டார்கள் என்ற கன்றாவியான சமூக அமைப்பு,

ஏழை மக்கள் துன்பத்தில் வாட, உல்லாசமாக சுற்றித்திரியும் அமைச்சர்கள்,

அரசியலுக்குள் மதத்தைச் சொருகி, பதவியேற்ற மறுநாளே, புத்த பிக்குகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் கன்றாவியான ஜனாதிபதி,

சாலைவிதிகளை மீறி வாகனங்களை வேகமாகச் செலுத்தும் சாரதிகள்,

நோயாளிகள் மீது நாய் மாதிரி குரைக்கும் டாக்டர்கள்,

இன்ன பிற சமூக அவலங்கள் எல்லாமே காட்சிகளாக விரியும்!

ஃபிரான்ஸ் ஜனாதிபதி - ஐரோப்பாவின் ஆளுமை

அவன் ஒப்பிட்டுப் பார்ப்பான்! அவனுக்கு கோபம் கோபமாக வரும்!! மக்களைக் கவனிக்கவேண்டிய அரசாங்கம் தூங்கிகொண்டு இருப்பதைக் காண்பான்! இதெல்லாம் சேர்ந்து தீராத வெறுப்பாக, அரசின் மீது வந்து விழும்!

அதே சமயத்தில், வன்னியில் ஒரு நிழல் அரசு இருப்பதை அவன்காண்கிறான்! அங்குள்ள காவல்துறையினர் எப்படி சட்டத்தை எல்லோருக்கும் சமமாக நிலை நாட்டுகின்றனர் என்பதை அவன் பார்க்கிறான்!
ஒரு சதத்தைக் கூட லஞ்சமாக வாங்காத அரசு அதிகாரிகளைப் பார்க்கிறான்,
முக்கியமாக எந்தச் சாம வேளையிலும், எங்கும் தனியாகச் சென்றுவரக்கூடிய ஒரு அதி உன்னத சுதந்திரம் நிலவுவதை ஒப்பிட்டுப் பார்க்கிறான்!

பிக்குகளே சரணம் - மதத்தால் நாடு குட்டிக் கரணம்

வன்னியிலே தலைவர் பிரபாகரன் ஒரு குட்டி ஐரோப்பாவை உருவாக்கி வைத்திருப்பதை அவன் கண்டுகொள்கிறான்! - அங்கு அச்சமில்லை, ஆட்கடத்தல் இல்லை, லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை! ஒரு அழகிய தேசத்தை மெல்ல மெல்ல பிரபாகரன் கட்டியெழுப்பி வருவதை அவன் காண்கிறான்!

அந்தத் தேசம் விடுதலை பெற்று, தனி நாடாக வந்தால், லண்டன், ஃபிரான்ஸ், கனடாவுக்கு நிகரான ஒரு அருமையான நாட்டை தலைவர் உருவாக்கிவிடுவார் என்பதை அவன் உறுதியாக நம்புகிறான்! அப்புறம் என்ன? விடுதலைப் புலிகள் மீது அளவுகடந்த பற்று வந்துவிடுகிறது!

வெளிநாட்டு அரசாங்கங்களின் ஆட்சிமுறைகளைப் பார்த்த ஒருவன் ஒருபோதுமே, இலங்கை அரசை நல்ல அரசு என்று சொல்ல மாட்டான்! ஃபிரான்சில் இருக்கும் நண்பர் ஒருவர் சொன்னார், “ ஃபிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலா சர்க்கோசியின் காலடித் தூசிக்குகூட, மஹிந்த ராஜபக்ச தகுதி அற்றவர்’ என்று!

உண்மையில் இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளின் அரசுகளுக்கு மக்கள் மீது எந்தவிதமான அக்கறையும் இல்லை! அவர்கள் மக்களை நேசிப்பதும் இல்லை! கருத்துச் சுதந்திரமோ, பேச்சுச் சுதந்திரமோ, எழுத்துச் சுதந்திரமோ, ஒரு மண்ணும் கிடையாது!

ஈழத்தமிழர்களில் 15 லட்சம் வரையான தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்! அந்த 15 லட்சம் பேருக்கும் மஹிந்தவைப் பார்த்தால் கோமாளி மாதிரித்தான் இருக்கும்! பின்ன என்ன, வெள்ளைநிற ஜிப்பா, தோளிலே சிவப்புத்துண்டு! இது கோமாளி வேஷம் இல்லாமல் வேறென்ன? கோட் சூட் போட்டு நடந்தால் என்ன குடியா முழுகிவிடும்!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்கிற தலைவன், இப்படியா தனது மதம் சார்ந்த அடையாளத்தை காவிக்கொண்டு திரிவான்? முட்டாள்தனம் இல்லையா?

மேலும் வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் ஒருபோதுமே இலங்கையில் வாழ விரும்பவே மாட்டார்கள்! அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் விரும்பிய தேசம் தமிழீழம்! அதன் தலைவர் பிரபாகரன் அவ்வளவுதான்!

மற்றும் படி, இலங்கை எனது தாய்நாடு என்றோ, மஹிந்த எனது ஜனாதிபதி என்றோ சொல்வது வெட்கக்கேடு என்றே எல்லோரும் நினைக்கிறார்கள்!

கனடாவின் மொன்றியல் மாநகரம்

உண்மையில் இலங்கை போன்ற ஒரு அழகான குட்டித்தீவு, இங்கிலாந்துக்காரனின் கைகளில் இருந்திருந்தால், அது சொர்க்கலோகமாக மாறியிருக்கும்! எமது தலைவரும் இதையேதான் செய்திருப்பார்! ஆனால் குரங்கின் கையில் பூமலை கொடுத்தது போலல்லவா இருக்கிறது!

பொருளாதாரத்தை விடுங்கள்! மற்றும் படி இலங்கை அரசு நினைத்தால், நல்லதொரு ஆட்சி முறையை இலங்கையில் தோற்றுவிக்கலாம்! மக்களை அச்சமின்றி வாழவைக்கலாம், மக்களுக்கு சொர்க்கத்தைக் காட்டலாம்!

ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்! அதற்கான தகுதியோ, திறமையோ, அப்படியான சிந்தனையோ, ஆக்கபூர்வமான எண்ணங்களோ அவர்களிடம் இல்லை!

முதலில் கிரீஸ் பேய்களை ஒழிக்கட்டும்! மிச்சத்தை பிறகு பார்க்கலாம்!

No comments:

Post a Comment