தமிழ் தேசிய கூட்டமைப்பு
அரசியல்வாதிகளில் யாரின் கதையை நம்புவது யாரை நம்பககூடாது என்று மக்கள் திண்டாடும் வகையிலேயே அநேகமான அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரனும் அவரது பெறா மகனான கிழக்கு மாகாண முதலமைச்சரும் ரி.எம்.வி.பி கட்சியின் தலைவருமான ஒட்டுக்குழு பிள்ளையானும் ஆளுக்கு ஆள் பிடித்து சாப்பிடுவது போல் மேடைகளில் முழங்குவார்கள்.அது மட்டுமா ஒருவொருக் கொருவர் கொலை மிரட்டல் விட்டதாக ஊடகங்களுக்கும் செய்தி சொல்லுவார்கள். மக்களும் இவர்கள் சொந்தத்துக்கப்பால் அரசியலிலும் அவர்களது கொள்கையிலும் உறுதியாக உள்ளார்கள் என்று நம்பி விடுவார்கள்.ஆனால் இவர்கள் வெளியில் ஒருவருக் கொருவர் உறைப்பாக காட்டிக் கொண்டு மேடைகளில் முழங்கினா லும் உள்ளுக்குள் இனிப்பாக பேசி அரசியல் செய்கின்றார்களோ என்று எண்ணும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு சித்தாண்டியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் பிள்ளையானும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அருகருகாக அமர்ந்து அன்பாக அளவளா வினார்கள்.இதை இங்கு ஏன் சுட்டிக்காட்டப்படுகின்றதென ்றால் இவர்கள் வெளியில் சும்மா மக்களை ஏமாற்றுவதற்காகவும் ஊடகங்களுக்காகவும் ஒருவொருக்கொருவர் விரோதிகளாக காட்டிக் கொள்கின்றார்கள்.இவர்களின் வார்த்தைகளை நம்பி ஆதரவாளர் களும் ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்கின்றார்கள் இதனால் ஏமாறுவது அப்பாவி பொது மக்களே.அறிக்கை விடுவது போன்றும் மேடைகளில் ஆவேசப்படுவது போன்றும் மக்கள் நம்பிப்போட்ட வாக்குகளில் அரியாசனம் அமர்ந்த, இவ்வாறான ஒவ்வொரு அரசியல்வாதியும் சுயநல அரசியில் செய்யாமல் உண்மைக் குண்மையாக செயற்படுவதே மக்களுக்குச் செய்யும் முதல் கடமையாகும். இதுவே பலரின் கோரிக்கையுமாகும்.எனவே இவ்வாறாக வெளிவேடத்துடன் செயற்படுபவர்கள் இவர்கள் மட்டுமல்ல இன்னும் பலர் உண்டு.
எனக்கு முதலமைச்சருடன் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முதலமைச்சருக்கு என்னுடன் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஏனெனில் என்னை கொல்வதற்கு அவர் பல சதிகளை மேற்கொண்டு வருகின்றார் என்பதை நான் அறிந்துள்ளேன்.இதனால் தன்னை நல்லவர் என்று காட்டிக் கொள்வதற்கு இவ்வாறான புகைப்படங்களும், இணைய செய்திகளும் அவருக்கு தேவையாக இருக்கின்றது. சென்ற இடமெல்லாம் என்னை அவதூறாக பேசுவரிடம் நட்புறவு வைப்பதா? என்னை கொலை செய்ய முயற்சிப்பவருடன் நட்புறவு வைப்பதா ?சிந்தியுங்கள் என் அன்பு உறவுகளே! பிள்ளையான் எனது உறவினர் மறுக்கவில்லை ஆனால் இந்நிலை எனது பாராளுமன்ற தேர்தலுக்கு விண்ணப்பித்த நாள் தொடக்கம் மறைந்து விட்டது
அன்று தொடக்கம் இன்று வரையும் அவரது கொலை அச்சுறுத்தல் தொடர் கிறது.தனது செயற்பாடுகளை மறைப்பதற்காகவும் தன்மீது மக்கள் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதாகவும் பிள்ளையான் தமது சகாக்கள் மூலம் வெளிப்படுத்திய செயற்பாடே வெளியில் உறைப்பு, உள்ளுக்குள் இனிப்பு, மற்றும் என்ன நடக்குது இங்கே? யாருக்கேன் தெரிஞ்சா சொல்லுங்கோ! என்ற இணையத்தள செய்திகளாகும். இதையிட்டு எனது அன்பு உள்ளங்கள் கவலை கொள்ள வேண்டாம். இவை உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
எங்களது கட்சி ரீதியாகவும், நடவடிக்கை ரீதியாகவும் எந்த உறவையும் நான் பிள்ளையானுடன் பேண முடியாது. ஏனெனில் பிள்ளையான் கிழக்கு மாகாணத்தை மட்டும் வைத்து அரசியல் நடத்துபவர். நாங்கள் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை வலியுறுத்தி தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு குறித்து எங்களது உயிரையும் துச்சமாக நினைத்து பணத்துக்கோ, பொருளுக்கோ, அமைச்சு பதவிக்கோ, ஆசை வார்த்தைகளுக்கோ, அற்ப சலுகைகளுக்கோ விலைபோகாதவர்களாக இருந்து இன்றுவரை எம்மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.ஆனால் முதமைச்சர் அதற்கு எதிரானவர். அவர் அரசாங்கத்துடனே இருப்பவர். நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக இருந்து கொண்டிப்பவர்கள்.
எனவே எந்த உறவை அவருடன் பேண முடியும்? ஆகவே இச்செய்திகளை எனது தமிழ் உணர்வு படைத்த உறவுகள் எவரும் நம்ப வேண்டாம். இது பிள்ளையானின் திருவிளையாடலாகும் என தெரிவிக்கின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தமது மறுப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
27 minutes ago ·
அரசியல்வாதிகளில் யாரின் கதையை நம்புவது யாரை நம்பககூடாது என்று மக்கள் திண்டாடும் வகையிலேயே அநேகமான அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரனும் அவரது பெறா மகனான கிழக்கு மாகாண முதலமைச்சரும் ரி.எம்.வி.பி கட்சியின் தலைவருமான ஒட்டுக்குழு பிள்ளையானும் ஆளுக்கு ஆள் பிடித்து சாப்பிடுவது போல் மேடைகளில் முழங்குவார்கள்.அது மட்டுமா ஒருவொருக் கொருவர் கொலை மிரட்டல் விட்டதாக ஊடகங்களுக்கும் செய்தி சொல்லுவார்கள். மக்களும் இவர்கள் சொந்தத்துக்கப்பால் அரசியலிலும் அவர்களது கொள்கையிலும் உறுதியாக உள்ளார்கள் என்று நம்பி விடுவார்கள்.ஆனால் இவர்கள் வெளியில் ஒருவருக் கொருவர் உறைப்பாக காட்டிக் கொண்டு மேடைகளில் முழங்கினா லும் உள்ளுக்குள் இனிப்பாக பேசி அரசியல் செய்கின்றார்களோ என்று எண்ணும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு சித்தாண்டியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் பிள்ளையானும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அருகருகாக அமர்ந்து அன்பாக அளவளா வினார்கள்.இதை இங்கு ஏன் சுட்டிக்காட்டப்படுகின்றதென
No comments:
Post a Comment