படுகொலைச் செய்யப்பட்ட பாரத லக்ஷ்மணின் சடலத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற ஜனாதிபதி மஹிந்தவுக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் ஆவேசமான எதிர்க்கருத்துக்களை அடுத்து பாதுகாப்புத் தரப்பின் தலையிட்டு அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். அதன் காரணமாக பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி, பாரதவின் குடும்பத்தவர் எவருடனும் உரையாடாத நிலையில் அங்கிருந்து அவசரமாகப் புறப்பட்டு வந்துள்ளார்.
அதேபோன்று பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவின் சடலம் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு சென்றிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பாரதவின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரத்துடன் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
அதன் காரணமாக நாமல் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை பாரத லக்ஷ்மணின் படுகொலைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே முழுப்பொறுப்பேற்க வேண்டுமென கொலன்னாவை மக்கள் பெரும்பான்மையாக கருத்து வெளியிட்டுள்ளதுடன், பாரதவின் கொலையாளிகளுக்கு எதிராக தேங்காய் உடைப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment