
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தவபாலன் அவர்கள் வீதியில் வைத்து தாக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர் சமூகம் அடுத்த நாள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. உயர்பட்டப்படிப்பு பீடத்துக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் புகைப்படங்களை எடுத்தனர். பின்னர் அவர்களை இவ்விரு புலனாய்வுப் பிரிவினரும் கூப்பிட்டு எச்சரித்துள்ளனர். இவர்கள் மாணவர்களுடன் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. புலனாய்வுப் பிரிவால் மட்டும் தானா புகைப்படம் எடுக்க முடியும் எம்மாலும் அவர்களை எடுக்கமுடியும் என்பதுபோல இது அமைந்துள்ளது.......... read more
No comments:
Post a Comment