
இந் நிலையில் கேணல் ரமேஷ் அவர்களை இலங்கை இராணுவம் உயிரோடு வைத்து விசாரணை நடத்தும் காணொளிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் இறந்து கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகியது. அதே இடத்திற்கு அருகாமையில் தற்போதும் மேலும் சிலரது உடல்கள் இருப்பதும் புகைப்படமாக வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. காரணம் அவர்களுடன் சென்ற புலிகளின் முக்கிய தளபதிகள் அல்லது முக்கியஸ்தர்களின் மனைவி மற்றும் உறவினர்களையும் இலங்கை இராணுவம் கொடூரமாகக் கொலைசெய்துள்ளது இப் புகைப்படத்தில் தெளிவாகியுள்ளது.
மற்றும் முள்ளிவாய்க்காலில் வைத்து சிலரை இலங்கை இராணுவம் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்ததும் புகைப்படமாக வெளியாகியுள்ளது. முள்ளிவாய்க்காலை இறுதியாக இராணுவம் கைப்பற்ற முன்னர் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் போது அப்பகுதி தீ பற்றி எரிந்தவண்ணம் உள்ளதும் புகைப்படங்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனை வைத்தே அங்கே எவ்வாறான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதனை அனைவராலும் ஊகிக்க முடியும். தமிழ் மக்களையும் சரணடைந்த புலிகளையும் மற்றும் அவர்களது உறவினர்கள் என்ற ஒரு காரணத்துக்காகவும் இலங்கை இராணுவம் அவர்களை ஈவிரக்கம் இன்றி படுகொலைசெய்துள்ளது. நிர்வாணப்படுத்தி உடலங்களை அவமானப்படுத்தியுள்ளது. இவை அனைத்தையுமே தமிழர்கள் என்றும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பது திண்ணம்.






__._,_.__
No comments:
Post a Comment