Translate

Saturday 22 October 2011

ஆடுகளம் - அனைத்துலக நடனப் போட்டி




நடனத்திற்கு உலகமே அரங்கம் ஆகும். இதனை எடுத்துக் காட்டும் வகையில் 'உலகலாவிய தமிழ் இளையோர் அவை' 'ஆடுகளம்' என்னும் அனைத்துலக நடனப் போட்டியை முதன் முறையாக இவ்வாண்டு நடாத்தவுள்ளது. யேர்மனியின் முனிக் நகரில் ஒக்டோபர் 22 ஆம் நாள் நடைபெறவுள்ள இந்த மாபெரும் நடனப் போட்டியில் தற்சமயம் 8 நாடுகளில் இருந்து நடனக் குழுக்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளன. பல நூற்றாண்டுகளாக உணர்வுகளை வெளிப்படுத்தவும் கதைகளையும் நல்ல கருத்துகளையும் கூறவும் சமூகங்களை ஒள்றிணைத்து உருவாக்கவும் நடனக் கலை ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.


அக்கலையை உலகவாழ் தமிழ் இளையோர் ஆர்வத்தோடும் பெருவிருப்போடும் பயின்று, அதில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அவ்வாறான இளையோரை இணைத்து, அவர்களின் ஆற்றலை கண்டறிந்து, அவர்களுக்கு ஓர் உலகலாவிய அரங்கினை அளிக்கும் முகமாக 'ஆடுகளம்' நடாத்தப்படவுள்ளது. ஆடுகளத்தின் கருப்பொருளாக 'உலக அமைதி தேடல்' இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை தொடர்ந்து உலக அமைதி, சமாதானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை தமிழ் இளையோர் உணர்ந்திருக்கின்றனர். ஆகையால், உலக அமைதி என்னும் கருப்பொருள் ஊடாக எமது தமிழ் இளையோர் உலக அமைதி வேண்டி தங்கள் உணர்வுகளை நடனம் மூலம் வெளிக்காட்ட ஆடுகளம் வாய்பாளிக்கும்.
'ஆடுகளம்' பற்றி ஆடுகள ஒருங்கிணைப்பாளர் ஒருவர் 'தாங்கள் நேசிக்கும் நடனக்கலை ஊடாக தங்கள் மனங்களில் பதிந்து இருக்கும் உலக அமைதிக்கான ஏக்கத்தை வெளிப்படுத்த ஆடுகளம் ஓர் அரங்காக அமையும்' எனக் கூறியுள்ளார். ஆடுகளத்தில் பங்குபெறுவோர் மிகவும் ஆவலுடன் போட்டியை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். போட்டியில் பங்குபெறும் ஒருவர் 'எமது திறமையை வெளிகாட்ட ஓர் உலக அரங்கு நல்ல வாய்ப்பாகும். பல்வேறு நாடுகளில் பரந்து வாழும் தமிழ் இளையோர் இடையே உள்ள ஒற்றுமையையும் எமது குறிக்கோள்களில் உள்ள ஒற்றுமையையும் வெளிக்காட்டவும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்' எனக் கூறியுள்ளார்.
நன்றி
Media Team
Tamil Youth Organisation - United Kingdom

No comments:

Post a Comment