Translate

Sunday, 13 November 2011

யாழ்ப்பாணத்தில் விபச்சார விடுதி! பொலிஸாரினால் முற்றுகை : 13 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் விபச்சார விடுதி! பொலிஸாரினால் முற்றுகை : 13 பேர் கைது

யாழ்.நகரப்பகுதியில் உள்ள விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக எட்டு ஆண்களையும் ஐந்து பெண்களையும் இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் விபச்சாரம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து,  யாழ் பொலிஸார் முற்றுகையிட்ட போதே விடுதி உரிமையாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  யாழ்.பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிட்ட முதல் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment