தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் வகையிலான இலங்கையின் இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியமை அம்பலமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் இந்தியா மீதான நோர்வேயின் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை தொடர்பில் இந்தியா மீதான நோர்வேயின் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வினை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசு எந்தளவு உண்மைத்தன்மையுடன் இல்லாவிட்டால் இதய சுத்தியுடன் செயற்பட்டு வருகின்றது என்பது தெரியாது.
புலிகளுக்கு எதிரான இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான ஒத்துழைப்பினை வழங்கியது குறித்து தற்போது நோர்வே பகிரங்கப்படுத்தியிருந்தாலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத் தளபதிகள் மற்றும் அமைச்சர்கள் இவ்விடயத்தை யுத்தம் நிறைவடைந்த 2009 காலப்பகுதியிலேயே கூறிவிட்டனர்.
எனினும் இராணுவத்துக்கு உதவியது தொடர்பிலான இலங்கையின் வெளிப்பாட்டை இந்தியா இதுவரையில் மறுக்கவில்லை எனவும் சுரேஷ் எம்.பி. தெரிவித்தார். _
No comments:
Post a Comment