2018 ஆம் ஆண்டு பொதுநலவாய போட்டிகள் - வாய்ப்பை இழந்தது இலங்கை

2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்திருக்கிறது. அந்த வாய்ப்பு அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்துள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டையும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினைப் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
இந்த இரு இடங்களில் எதனைத் தெரிவு செய்வது தொடர்பான வாக்கெடுப்பு பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
வாக்கெடுப்பில் அவுஸ்திரேலியாவுக்கு 43 வாக்குகளும் இலங்கைக்கு 27 வாக்குகளும் கிடைத்தன.
இந்நிலையில் இலங்கை அந்த வாய்ப்பினை இழந்துள்ளது
No comments:
Post a Comment