காதலியுடன் தான் கொண்ட பாலியல் உறவைக் காணொளியாக வெளியிட்ட காதலன்!! - யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
தான் காதலித்ததாகக் கூறும் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு அதனைக் கைத்தொலைபேசி மூலம் படம் பிடித்து ஏனையோருக்கு விநியோகித்து வந்தார் என்ற குற்றச்சாட்டப்படும் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னராசா தனேஸ்வரன் (வயது-39) என்ற கொட்டடியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சின்னராசா தனேஸ்வரன் (வயது-39) என்ற கொட்டடியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்.பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தலைமையிலான பொலிஸ் குழுவினரே நேரில் சென்று இவரைக் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்ததாவது,
கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த சின்னராசா தனேஸ்வரன் என்பவர் வேலணையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பாலியல் உறவு கொண்டு அதனைத் தனது கைத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
இது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. தான் உறவில் ஈடுபட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை அவர் ஏனையோருக்கு விநியோகித்து வந்துள்ளார்.
நீலப்படம் விநியோகிப்பது போன்று சீ.டி.களில் பதிவு செய்தும் கொடுத்துள்ளார்.
வீடியோவில் காணப்படும் பெண் தற்பொது வெளிநாட்டில் இருக்கின்றார். சந்தேக நபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆபாசக் காட்சிகளை அடுத்தவர்களுக்கு விநியோகித்து வந்துள்ளார்.
எமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நபரைக் கைது செய்தோம். அசிங்கமான பாலியல் காட்சிகளை விநியோகித்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்ற முறைப்பாட்டின் கீழ் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment