Translate

Saturday, 12 November 2011

சிறீலங்கா அரசின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கெதிராக அணி திரண்ட தமிழ் மக்கள்


சிறீலங்கா அரசின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கெதிராக அணி திரண்ட தமிழ் மக்கள்

கனடாவின் நோத் யோர்க் நகரில் சிறீலங்கா அரசின் ஏற்பாட்டில் இடம் பெற்ற
தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தினைப் பகிஷ்கரிக்கு முகமாக நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடித் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

ஈழத்தமிழினத்தின் அழிப்பினையே குறியாகக் கொண்டு தொடர்ந்தும் தமிழ் மக்களை
அழித்தும் அடக்கி ஒடுக்கி தமிழ் மக்களின் காணிகளை அபகரித்தும் அவர்கள் மீது
இராணுவ அடக்கு முறைகளை இன்னமும் பிரயோகித்துக் கொண்டிருக்கும் சிங்களப்
பேரினவாத அரசானது போர்க்குற்ற விசாரணையினைத் திசை திருப்பவும் இன அழிப்பில்
தாங்கள் பெற்ற வெற்றியினைக் கொண்டாடு முகமாகவும் இம் முறை தீபாவளிப்
பண்டிகையின மிகவும் விமரிசையாகக் கொண்டாடும் முகமாக சிறீலங்கா அரசுடன் இணைந்து வேலை செய்யும் சில தமிழ்ப் பிரமுகர்களுக்கும் அழைப்பினை அனுப்பி
வைத்திருந்த்து அனைவரும் அறிந்ததே.
இத் தீபாவளிப் பண்டிகையினை கொண்டாடுவதற்கு சிங்கள அரசின் முன்னாள் இடது சாரித்
தலைவரும் இந் நாள் ராஜபக்ச இனப் படுகொலை அரசின் ஒரு மந்திரியுமான வாசு தேவ
நாணயக்காரா என்ற அமைச்சரையும் அனுப்பி வைத்திருந்தது.
சிறீலங்கா இனவாத அரசின் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு எதிரான
பரப்புரையை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியற் பிரிவு
செய்திருந்தது. அத்துடன் ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர்கள், கனடிய பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஆகியோரையும் இப் பண்டிகைக்கு சமுகமளிக்க வேண்டாம் எனவும்
அரசியல் பிரிவு கேட்டுக் கொண்டது. அதற்காகிய காரணத்தினை தெளிவாகவும்
விளக்கமாகவும் தெரிவித்தமையால் சென்ற ஆண்டு சமுகமளித்த பல அரசியல் தலைவர்கள்
இந்த ஆண்டு இவ் விழாவிற்கு சமுகமளிகவில்லை என்பதும், நடன நிகழ்ச்சி வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த ஒரு நடன ஆசிரியை நிகழ்ச்சியை ரத்துச் செய்ததும் குறிப்பிடத் தக்கது.
பல்லின சமுகத்தினைச் சேர்ந்த கனடியப் பாராளுமன்ற அரசியல் தலைவர்கள்
சமுகமளிக்காத இந்த தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு, தாங்கள் பகைடைக்காய்களாகப் பயன்படுத்தப் படுகிறோம் என்பதை உணராத சிலதமிழர்கள் சமுகமளித்திருந்தனர். இதிலும் முக்கியமாக கனடாவின் துர்க்கையம்மன் ஆலயத்தின் தியாகராஜக் குருக்கள் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டமை மக்கள்
மத்தியில் பெருத்த வேதனையினையும் வெறுப்பினையும் உருவாக்கி இருக்கின்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியற் பிரிவு ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்
பட்ட சிறீலங்கா அரசின் தீபாவளிப் பண்டிகையின் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில்
கனடியத் தமிழர் பேரவை, நாம் தமிழர் இயக்கம், கனடியத் தமிழர் இணையம், மேலும்
பல்வேறு ஊர்ச்சங்கங்கள் ஆகியன முக்கிய அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்
தக்கது. தமிழர் தேசிய ஊடகங்களான GTR, CMR, CTR, TVI Tamil One, யாழ் உதயன்,
போன்றவற்றின் பரப்புரை காரணமாக குறுகிய கால அவகாசத்தில் பெருந்திரளான
மக்கள் இப் பகிஷ்கரிப்பில் பங்கு கொள்ளக் கூடியதாக இருந்தது.
மேலும் பிரதான ஊடகங்களான City TV, Global TV என்பன இப் பகிஷ்கரிப்புப்
போராட்டத்தினை ஒளிப்படமாக்கியது குறிப்பிடத் தக்கதாகும்.

No comments:

Post a Comment