கடந்த ஞாயிறு அன்று (6 – 11 – 2011) ஒட்டாவாவிலுள்ள சிறீ லங்கா ஹை கமிஷன் தனது தூதரகத்தில் இரண்டாவது முறையாக தமிழர்களுக்காக என்று கூறி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளது.
டொரன்டோவில் இநிகழ்ச்சியானது கொரியன் கலாசார மையத்தில் வைத்து நடைபெற்றதாம்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் மாபெரும் எதிர்ப்புக்கிடையே வெற்றிகரமாக அவர்கள் இதனை நடத்தி முடித்தார்களாம். இதற்கிடையே புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வானொலியில் இது குறித்து தமிழர்களை போராட்டத்திற்கு வருமாறு அழைத்ததில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் வாயிலேயே பெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றதாம்.

ஆனால் இந்நிகழ்வில் ஒரு சில கனடிய அரசு அதிகாரிகளும், மிகப் பலர் சிங்களர்களும், தமிழர்களில் டக்ளஸ் போன்ற துரோகிகளுமே கலந்து கொண்டனர் என்பது நிகழ்ச்சியின் புகைப்படத்திலிருந்து தெரிகிறது.
நிகழ்ச்சி நடந்த அரங்கின் வாயிலிலேயே தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றால் கனடிய புலம் பெயர் தமிழர்கள் சிறீ லங்கா அரசின் இந்நிகழ்வை எதிர்த்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பலத்த எதிர்ப்புக்கிடையே துரோகிகளின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வு புலம் பெயர் தமிழர்கள் ஓரணியிலேயே உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டியது.
இவ்வாறு சிங்கள இனவாத அரசின் கைக்கூலிகளாக புலம்பெயர் தேசங்களில் செயற்படும் இவ்வாறான ஈனப்பிறவிகளை உடனே இனம்கண்டு அனைத்து தமிழர்களும் இவர்களை ஒரங்கட்ட வேண்டும் என்று ஈழதேசம் கேட்டுக்கொள்கிறது.http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=10716:2011-11-12-11-08-25&catid=40:specialnews&Itemid=63
No comments:
Post a Comment