பால் விலை-பஸ்கட்டண உயர்வை எதிர்த்து: ம.தி.மு.க. சார்பில் 28-ந்தேதி ஆர்ப்பாட்டம்; வைகோ அறிவிப்பு
கூடங்குளம் அனுமின் நிலையத்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் மத்திய அரசு இந்தளவுக்கு அதை கொண்டு வர முனைப்பு காட்டுவதற்கு இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் அளிக்கும் முடிவுதான் காரணம். கடந்த 2010 ஜூன் 9ல் இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய மின் உற்பத்தி கழகமும், இலங்கை மின் வாரியமும் கையெழுத்திட்டு உள்ளன.
கூடங்குளத்தில் கிடைக்க உள்ள மின்சாரத்தில் பாதிக்கும், குறைவான மின்சாரமே தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். ம.தி.மு.க. தொடக்கத்தில் இருந்தே கூடங்குளம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்து உள்ளது. மக்களும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பால் விலையையும், பஸ் கட்ட ணத்தையும் முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி உள்ளார். இதன் மூலம் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளார்.
இதை கண்டித்து வரும் 28-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்பேன். முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசு, மற்றும் கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஜனவரி 21-ந்தேதி கேரளத்துக்கு செல்லும் வாகனங்களை மறித்து முற்றுகை போடம் நடத்தப்படும். ம.தி.மு.க.வை வலுப்படுத்த உள்ளாட்சிகளில் செயலாளர்கள் பதவி உருவாக்கப்படுகிறது.
No comments:
Post a Comment