Translate

Wednesday, 30 November 2011

வட மாகாண அரச ஊழியர்களுக்கு 4ஆம் திகதி முதல் சிங்கள மொழிப் பயிற்சி


வட மாகாணத்தில் அரச திணைக்களங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் படி அரச பணியாளர்கள் 100 பேருக்கு  சிங்கள மொழியை கற்பிப்பதற்கான செயலமர்வு எதிர்வரும் 4ம் திகதி முதல் 24ம் திகதி நடைபெறவுள்ளது.

இச் செயளமர்வு யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி திணைக்களத்தில் நடத்தப்படவுள்ளது.
தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனம் ஆரம்பித்துள்ள 10 நாட்களைக் கொண்ட இம் மொழிப் பயிற்சி வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுகின்ற தமிழ் மொழிமூல அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை தெற்கில் அரச ஊழியர்களுக்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிப்பதற்கும் தேசிய மொழிகள் அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான தகவல்களை  அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment