பொய்யான முகவரியில்
விடுதியின் விட்டதில்
தொங்கும் அடையாளமில்லா
மரணங்கள் ...
பதினாறு வயது
பருவ பட்டாம் பூச்சியின்
பள்ளிமரணம் ....
பதினெட்டு வயது
கல்லூரிக் காளையின்
தண்டவாள மரணம்...
தீண்டாமையின்
உச்சத்தில் சாம்பலாய் ஆன
காதல் தளிர்களின் ஆறாத
மரணம் ...
கடன் பட்டவர்
குடும்ப சகிதம்
விஷமுண்டு மரணம் ....
நல்ல உள்ளங்களை
கள்ள உள்ளங்கள்
என கலங்கடித்த
கருப்பு மரணங்கள் ....
பெற்ற பிள்ளைகள்
ஒதுக்கிய
சாலையோர
முதிர்ந்த மரணங்கள் ...
இந்த மரணங்கள்
கல்வெட்டுகளில்
பொறிக்கப் படுவதில்லை ...
கண் மூடும் நொடியில்
மறைக்கப் படுவதும்
மறக்கப் படுவதும் ...
இந்த மரணங்களின்
மூளைகள் காலாவதியாகிப் போன
மருந்துகள் ...
பயன்படுத்தாமல் இருக்கும்வரை ..
இந்த மரணங்கள்
வாழ்ந்து கொண்டிருக்கும்
சமுதாயத்தின் கவனச் சிதறல் ..
அருகிலிருந்தும்
தவறவிடுகிறோம்
அருமையானவர்களை ....
சலவை செய்திடுவோம் மூளைகளை ...
தடுத்திடுவோம் தற்கொலைகளை .....!
விடுதியின் விட்டதில்
தொங்கும் அடையாளமில்லா
மரணங்கள் ...
பதினாறு வயது
பருவ பட்டாம் பூச்சியின்
பள்ளிமரணம் ....
பதினெட்டு வயது
கல்லூரிக் காளையின்
தண்டவாள மரணம்...
தீண்டாமையின்
உச்சத்தில் சாம்பலாய் ஆன
காதல் தளிர்களின் ஆறாத
மரணம் ...
கடன் பட்டவர்
குடும்ப சகிதம்
விஷமுண்டு மரணம் ....
நல்ல உள்ளங்களை
கள்ள உள்ளங்கள்
என கலங்கடித்த
கருப்பு மரணங்கள் ....
பெற்ற பிள்ளைகள்
ஒதுக்கிய
சாலையோர
முதிர்ந்த மரணங்கள் ...
இந்த மரணங்கள்
கல்வெட்டுகளில்
பொறிக்கப் படுவதில்லை ...
கண் மூடும் நொடியில்
மறைக்கப் படுவதும்
மறக்கப் படுவதும் ...
இந்த மரணங்களின்
மூளைகள் காலாவதியாகிப் போன
மருந்துகள் ...
பயன்படுத்தாமல் இருக்கும்வரை ..
இந்த மரணங்கள்
வாழ்ந்து கொண்டிருக்கும்
சமுதாயத்தின் கவனச் சிதறல் ..
அருகிலிருந்தும்
தவறவிடுகிறோம்
அருமையானவர்களை ....
சலவை செய்திடுவோம் மூளைகளை ...
தடுத்திடுவோம் தற்கொலைகளை .....!
No comments:
Post a Comment